உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

  • மறைமலையம் - 24

வழங்கிய தாகாமையானும், அன்றி அது முன்வழங்கிய தென்பதற்குக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்நூல்களிற் சான்றின்மையானும் அக் கதையை நக்கீரர் எழுதினாரென்பதூஉம் ஆகாது. அதுவேயு மன்றித், தலைச்சங்கம் 4440 ஆண்டு நடைபெற்ற தென்பதூஉம் நம்பற்பாலதன்று; மக்கள் வாழ்க்கையில் அத்துணை நீண்டகாலம் ஏதொன்றும் நடைபெறக் காணாமையானும் அதற்குப் பழையநூற்சான்று ஏதும் இன்மையானும் இந்நீண்ட கால அளவைக் கற்பித்தது, ஒன்றை ஆயிரமாகப் பெருக்கிப் பொய்க்கும் புராண காலத் தன்றி நக்கீரனார் காலத்தாகாது. இங்ஙனமே இடைச் சங்கத்தைப் பற்றிய வரலாற்றினுள்ளும் அகத்தியனார் பெயரும், அச் சங்கம் 3700 ஆண்டிருந்த தென்னும் நீண்ட காலவளவையுங் காணப்படுதலானும் அதுவும் நக்கீரனார் எழுதியதாகாது.தலைச்சங்க வரலாற்றின் கண், அச்சங்கத்தை நடைபெறுவித்தார் ஒருவர்பின் ஒருவராய் அரசுக்குவந்த பாண்டியர் எண்பத்தொன்பதின்ம ரென்பது குறிக்கப்பட்டிருக்கின்றது. உலகின்கண் ஆங்காங்கு அரசாண்ட அரசர்களின் தொகையையும், அவரரசுபுரிந்த ஆண்டுகளையுந் தனித்தனியே கூட்டிப், பின் ஆண்டின் தொகையை அரசரது தொகையால் வகுத்துப் பார்க்க, ஒவ்வோர் அரசர்க்கும் இருபது முதல் முப்பது ஆண்டுக்குமேல் ஆட்சிக்காலம் பெறப் UL ாமையை இஞ்ஞான்றை வரலாற்று நூலாசிரியர்கள் நன்காராய்ந்து முடிவுகட்டி யிருக்கின்றார்கள். அம்முடி பொடு பொருந்த, ஒரு பாண்டிய அரசர்க்குக் குறைந்தது இருபதாண்டு வைத்துக் கணக்குச் செய்யத்'தலைச்சங்கம்’ நடைபெற்ற காலம் 1780 ஆண்டுகள் ஆகுமே யல்லாமல், 4440ஆண்டுகள் ஆகா. இங்ஙனமே 'இடைச்சங்கத்’தை ஆ நடைபெறுவித்த பாண்டியர் ஐம்பத்தொன்பதின்மர் என்பதூஉம் அவ் வரலாற்றின்கட் சொல்லப்பட்டிருத்தலால், அவ் வைம்பத் தொன்பதின் மருக்கும் மொத்தமாய்ப் பெறப்பட்ட 1180 ஆண்டுகளே இடைச்சங்கம் நடைபெற்ற காலமாகும்; ஆதலால் ஆண்டுகள் நடைபெற்ற தென்பதும் பிழைபாட்டுரையாம். ஆகவே, இவ்விரண்டு சங்கங்களின் வரலாறும் நக்கீரனார் எழுதியதாதல் செல்லாது.

அது

3700

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/59&oldid=1590637" இலிருந்து மீள்விக்கப்பட்டது