உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

51

இனிக், 'கடைச்சங்க' வரலாறும் நக்கீரனார் எழுதிய தாகாது. என்னை? கடைச்சங்கம் நடைபெறுவித்த பாண்டி மன்னர் நாற்பத்தொன்பதின்மர் என்பது குறிக்கப்பட்டிருத்த லானும், அந் நாற்பத்தொன்பதின்மர்க்கும் 980 ஆண்டுகளே பெறப்படுவதாயிருக்க, அதுநடைபெற்ற காலம் 1850 ஆண்டுகளென்று வழுவுற வரையப் பட்டிருத்தலானு மென்பது. அதுவேயுமன்றி, 'அகத்தியம்” என்னும் இலக்கணத்தைப் பற்றிய குறிப்பு, இறையனாரகப் பொருளுரையிலாதல் ஏனைக் கடைச்சங்க நூல்களினாதல் ஒருசிறிதுங் காணப்படாதாக, இப் பாயிர வுரையிற் போந்த கடைச்சங்க வரலாற்றில் “அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமும் என்ப என்பது குறிக்கப்பட்டிருக்கின்றது. 'அகத்தியம்’ கடைச்சங்க காலத்துப் புலவர்பால் வழங்கிய துண்மையாயின், தொல்காப்பியச் சூத்திரங்கள் நக்கீரனாரது உரையின்கண் மிகுதியாய்ப் பயின்று வருதல்போல், அகத்தியச் சூத்திரங்கள் ஒருசிலவாயினும் அதன்கட் காணப்படுதல் வேண்டும் அன்றே? அவ்வாறு ஒருசிலவுங் காணப்படாமையின், அகத்தியம் என்பதொன்று கடைச்சங்க காலத்திலும் இல்லாமை திண்ணமாம்; அங்ஙனமாகவும், அஃது அஞ்ஞான் றிருந்ததெனக் கூறும் பொய்வரலாறு நக்கீரனார் உரைத்த தாகாது. இன்னுங் கடைச்சங்க ச்சங்க காலத்துப் புலவர்களாற் பாடப்பட்ட

வ:

"நெடுந்தொகை நானூறும் (அகநானூறும்), குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும் சிற்றிசையும், பேரிசையும் என்று இத்தொடத்தக்கன” என்பது கடைச்சங்க வரலாற்றிற் குறிப்பிட் டிருக்கின்றது. இங்ஙனங் குறிக்கப்பட்டுள்ள நூல்களுள் இதுகாறும் வெளிப்போந்தவை யெல்லாம், ஒரோவொரு புலவரால் ஆக்கப்படாமற், பற்பல காலத்திருந்த புலவர் பற்பலராற் பற்பல பொழுதுகளிற் பாடப்பட்ட பாக்களின் தொகை நூல்களாயிருக்கக் காண்கின்றோம். தலைச்சங்க காலத்திருந்த 'முரஞ்சியூர் முடிநாகராயர்’, ‘நெட்டிமையார், 'காரிகிழார்' 'நெடும்பல்லியத்தனார்' முதலான நல்லிசைப் புலவர் பாடிய செய்யுட்கள் ‘புறநானூற்'றின்கட் காணப்படு தலானும், ‘பரிபாடற் பாட்டுகளிற் சொல்லப்பட்டுள்ள திருமால் வணக்கத்தை ஆராயுங்கால் அப் பாடல்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/60&oldid=1590642" இலிருந்து மீள்விக்கப்பட்டது