உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் 24

பாடிய புலவர் பலருங் கடைச்சங்க காலத்திற்கு மிக முற்பட்டவராதல் வேண்டுமென்பதை மேலே 440 ஆம் பக்கத்திற் காட்டினமாகலானும், இவ்வாறே ஏனைத்தொகை நூல்களினுங் கடைச்சங்க காலத்தவரல்லாத பண்டை

நல்லிசைப் புலவர் தம் பாக்கள் விராய்க் காணப்படுதலானும் மேற்காட்டிய தொகை நூல்களெல்லாங் கடைச்சங்கப் புலவர்களாலேயே ஆக்கப்பட்டனவென்பது பொருத்தமில் கூற்றாம்; இப்பொருத்தமில் கூற்றைக் கடைச்சங்க காலத் திருந்த நக்கீரனார் எழுதினாரென்றல் இசையாமையால், இது கொண்டும் முச்சங்க வரலாறு நக்கீரனார் உரைத்ததன் றென்பது பெற்றாம்.

உரையாத

உள:

அவை

அற்றேல், நக்கீரனார் வரைந்த பாயிரவுரையினிடையே முச்சங்க வரலாறு கூறும் இப்பகுதி அவர் தொன்றாயின் ஆகுக; மற்று, இல்லாததொன்றை அங்ஙனம் உள்ளதுபோற் படைத்துப் பிறரொருவர் அதனை வழங்க விட்ட னரென்றல் யாங்ஙனமெனின்; நன்றுகடாயினாய்; முச்சங்க வரலாறு கிளக்கும் அப்பகுதி முற்றும் பொய்யாவது அன்று; அதன்கண் மெய்யாவன பல யாவையெனிற் காட்டுதும்: முரஞ்சியூர் முடிநாக ராயர் என்னும் நல்லிசைப் புலவர் தலைச்சங்கத்தில் வீற்றிருந்தாரென்னு முரை உண்மையுரையேயாம். பாண்டவர் ஐவர்க்குந் துரியோதனன் முதலிய நூற்றுவர்க்கும் நிகழ்ந்த பாரதப் போரில் முனைந்து நின்ற பாண்டவர் பாண்டவர் படைக்குப் படைக்குப் பெருஞ்சோறு வழங்கிய உதியஞ்சேரலாதன் என்னுஞ் சேரவேந்தனது ஈகைத்திறத்தினை வியந்து அவனை முன்னிலைப் படுத்து,

வலியுந் தெறலும் அளியும் உடையோய்! நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின் வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந! வான வரம்பனை நீயோ பெரும! அலங்குனைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தனைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/61&oldid=1590647" இலிருந்து மீள்விக்கப்பட்டது