உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

53

என்று அப் புலவர் பெருந்தகையாகிய முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய“மண்டிணிந்த நிலனும்” என்னுஞ் செய்யுள் புறநானூற்றிற் கடவுள்வாழ்த்துச் செய்யுளுக்குப் பின்னே முதலாக வைக்கப்பட்டிருக்கின்றது. அஃது அத்துணைப் பழைய காலத்தே பாடப்பட்ட செய்யுளாதல் நோக்கியே,பண்டிருந்த சான்றோர் அதனை அந் நூலின் முதற்கட் பெய்துவைத்தா ரென்பது தெற்றென விளங்கும். பாரதப்போரில் நின்ற பாண்டவர் படைக்குஉதியஞ்சேரன் பெருஞ்சோறு வழங்கிய செய்தி,

உதியஞ் சேரல்,

பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை

என்று அகநானூற்றினும்,

ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன் றெழுந்த

(233)

போரிற் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த

சேரன் பொறையன் மலையன் திறம்பாடி

(ஊசல்வரி, 24)

என்று சிலப்பதிகாரத்தினும் நன்கெடுத்து மொழியப் பட்டிருத் தலால், அஃது உண்மை வரலாறேயாதல் ஐயுறவின்றித் துணியப்படும்.

இனித், தலைச்சங்கம் நடைபெற்ற காலத்தில் ஒருவர் பின் னொருவராய் அரசுபுரிந்த பாண்டிவேந்தர் எண்பத்தொன் பதின்மரெனவும், இடைச்சங்கம் நடைபெற்ற காலத்தில் அங்ஙனமே அரசுபுரிந்த பாண்டியர் ஐம்பத்தொன்பதின்ம ரெனவும் அம் முச்சங்க வரலாற்றிற் காணப்படுங் குறிப்புகள் ண்மையாவனவேயாம். யாங்ஙனமெனிற்

கூறுதும்: மேலேகூறிய பாரதப்போர் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன் நிகழ்ந்ததாகும் என்பதனை வைத்தியா என்னும் அறிஞர் தாம் எழுதிய ‘மகாபாரத ஆராய்ச்சி” என்னும் நூலில் உயர்ந்த பல உண்மைச் சான்றுகள் காட்டி நன்குவிளக்கியிருக்கின்றனர். மாபாரதப் போர் நிகழ்ந்தகாலம் கிறித்து பிறப்பதற்குமுன் 1250 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகு மெனத் ‘தத்தரும்” 1194-ஆம் ஆண்டில் என ‘வேலந்தைக் கோபால ஐயரும்' புகன்றவை பொருந்தாவாய்ப் பிழைபடுதலும், சதபத பிராமணமானது கி.மு. 2500 ஆம் ஆண்டில் அஃதாவது இற்றைக்கு நாலாயிரத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/62&oldid=1590652" இலிருந்து மீள்விக்கப்பட்டது