உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் - 24

நானூறு ஆண்டுகட்குமுன் இயற்றப்பட்ட தொன்றாகுமென்று பாலகங்காதர திலகர் பெரிது ஆராய்ந்து நிறுவிய கொள்கையே பொருத்தமாதலும்? அவரால் நன்காராய்ந்து காட்டப்பட்டிருக் கின்றன. அவ் வாராய்ச்சிகளெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும்; ஆகலான் அவற்றை அந் நூல்களிற் கண்டுகொள்க. இங்கே, அம் முடிபு தமிழ் முச்சங்க வரலாற்றுட் காணப்படுங் காலக்கணக்கோடு ஒத்திருத்தலே யாங் காட்டுதற்கு உரித்தாவதாம்.

தலைச்சங்கம் நடைபெறத் துவங்கிய காலம்முதல் அதன் ஈறுவரையில் 89 பாண்டியர்கள் அரசாண்டன ரென்பதனால் அதன் முழுக்கால வல்லை 1780 ஆண்டுகளாகும்; இடைச்சங்கம் நடைபெற்ற கலத்தில் 59 பாண்டியர்கள் இருந்தன ரென்பதனால் அதன் முழுக்கால வெல்லை 1180 ண்டுகளாகும்; கடைச்சங்க காலத்தில் 49 பாண்டியர்கள் இருந்தமை நுவலப்படுதலால் அதன் முழுக் காலவெல்லை 980 ஆண்டுகளாகும்; ஆகத் தமிழ் முச்சங்கம் நடைபெற்ற மொத்தக் காலம் 3940 ஆண்டுகளாதல் இனிது பெறப்படும். இனிக், கடைச்சங்கம் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் முடிவடைந்த தென்பதை மேலே விளக்கிக் காட்டின மாதலால், முச்சங்ககால மொத்தத் தொகையில் 200 ஆண்டுகள் கழிக்கக், கிறித்து பிறப்பதற்கு 3740 ஆண்டுகட்கு முன்னர்தான் தலைச்சங்கம் துவங்கிய தென்பது தெளியப்படும். மற்றுத்தலைச்சங்கம் 1780 ஆண்டுகள் நடைபெற்றுக், குமரிநாடு கடல்கொண்ட காலத்தில் அதற்குத் தலைநகராகிய தென்மதுரையும் அழிந்து

பட்டமையால், அதன்கண் நடை பெற்ற அத் தலைச்சங்கமும் அழிந்துபட்டது! எனவே அத் தமிழ்ச்சங்க முடிவுங் குமரிநாடு கடல்கொண்ட காலமுஞ் சிறிதேறக்குறையக் கி.மு. 2000த்தில் அஃதாவது இற்றைக்கு 4000 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தனவாமென்பது தானே போதரும். மநுவென்பவர் காலத்து நிகழ்ந்த கடல்கோள் ஒன்று சதபத பிராமணத்தின் கண் (1, 8, 11-1) நுவலப்பட்டிருக்கின்றது. அதனால், அக் கடல்கோள் நிகழ்ச்சியினைக் கூறுஞ் சதபத பிராமணப்பகுதி, இற்றைக்கு நாலாயிர ஆண்டுகட்குமுன் அக் கடல்கோளை யடுத்துச் செய்யப்பட்டதாகல் வேண்டுமென்பது நன்கு பெறப்படும். பாபிலோனியர் என்னும் மிகப் பழைய மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/63&oldid=1590656" இலிருந்து மீள்விக்கப்பட்டது