உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

3

4

55

வழங்கிய இக் கடல்கோள் வரலாறு கி.மு. 2000 ஆம் ஆண்டில் அவர்களாற் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றிற் சொல்லப் படுதலாலும், யூதவேதத்தின் முதலாகமத்திற் குறிக்கப்பட்ட உலகத் தோற்றத்திற்குப்பின் 1659 ஆண்டுகள் கழித்து அஃதாவது 2344ஆம் ஆண்டில் அக்கடல்கோள் நிகழ்ந்ததென்று யூத நூலாசிரியர்கள் கணக்கிட்டிருத்தலாலும், குமரிநாடு முதன்முதல் கடலால் விழுங்கப்பட்டது இற்றைக்கு நாலாயிர ஆண்டுக்கு முன்னென்பது துணியப்படும். தனித்தனி வெவ்வேறிடங் களில் இருந்த தமிழர், ஆரியர், பாபிலோனியர், யூதர் என்னும் பழைய பல்வேறு மக்கட்பிரிவினர் அதற்குக் கூறுங் காலக்கணக்குப் பெரிதும் ஒத்திருத்தல்கொண்டு, அக் கடல்கோள் நாலாயிர ஆண்டுகட்குமுன் நிகழ்ந்தமை ஒருவாற்றானும் ஐயுறற்பாலதன்றாம். இங்ஙனமாகத், தமிழர் அல்லாத ஏனைப் பழையமக்கள் மொழிந்த கடல்கோட் காலக்கணக்கொடு தமிழ் முச்சங்கம் நடாத்திய பாண்டி வேந்தரின் காலக்கணக்குப் பெரும்பாலும் ஒத்திருத்தலின், இறையனாரகப்பொருள் உரைப் பாயிரவுரையில் தலைச்சங்கம் நடாத்திய பாண்டிமன்னர் எண்பத்தொன்ப தின் மெரனவும், டைச்சங்கம் நடாத்திய பாண்டிமன்னர் ஐம்பத்தொன் பதின்மரெனவும், கடைச்சங்கம் நடாத்திய பாண்டிமன்னர் நாற்பத்தொன்பதின்ம ரெனவும் மொழிந்த வரலாற்றுரை உண்மையுரையே யாதல் கடைப்பிடித்துக் கொள்க.

அற்றாயினும், சதபத பிராமணத்திற் சொல்லப்பட்ட கடல்கோள் தென்னாட்டின்கண் நிகழ்ந்ததென்று அதன்கட் கூறப்படாமையானும், அதனை ஆராய்ந்த 'பாலகங்காதர திலகர்' அது வடதுருவத்தின் கண்ணே நிகழ்ந்த தாகல் வேண்டுமெனக் கூறுதலானும், அது குமரிநாட்டைக் கொண்ட கடல்கோளே என்பதற்குச் சான்றென்னை யெனிற் கூறுதும் சதபதபிராமணம் அக் கடல்கோள் இன்ன இடத்தில் நிகழ்ந்ததென்று உரைத்திலதேனும், அதற்குப் பின்வந்த புராணங்களில் மிகப் பழைதாகிய மற்சபுராணம் (1, 12), அக் கடல்கோள்களில் தொடர்புற்ற மநு என்பவர் மலையம் என்னும் மலைமேல் தவம்புரிந்து கொண்டிருந்தார் என்று நுவலுதலானும், சதபதபிராமண மற்ச புராணங்களிற் போந்த அச் சுருக்க வரலாறுகளுக்கு விரிவுரைபோற் றோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/64&oldid=1590661" இலிருந்து மீள்விக்கப்பட்டது