உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

ப்

மறைமலையம் - 24

பாகவத புராணமானது (8, 24, 7) தமிழ்நாட்டில் ஓடுங் கிருதமாலை என்னும் ஆற்றங்கரையில் தமிழர்க்கு அரசனான சத்தியவிரதன் என்பான் தவஞ் செய்துகொண்டிருந்த காலையில், அங்கு மீன்வடிவில் வந்த ஒரு தெய்வம்அவற்கு அங்கு நிகழப்போகுங் கடல்கோளினை முன் அறிவித்து, அறிவித்தவாறே அது நிகழலானபொழுது, அங்குப் போந்த மரக்கலம் ஒன்றில் அவனையும் அவனுடனிருந்தார் சிலரையும் ஏற்றுவித்து, வெள்ளத்தில் அம் மரக்கலத்தை இழுத்துக் காண்டு போய் அவர் தம்மையெல்லாந் தப்புவித்த வரலாற்றினை விரித்துரைத் தலானும், ‘மலையம்’ என்னும் பொதியமலை யிருந்த குமரி நாட்டிலேயே அக் கடல்கோள் நிகழ்ந்தமை நன்கு துணியப்படும். அத் தமிழ்நாட்டு மன்னனான ‘சத்தியவிரதன்' (இப் பெயர் அவனுக்குரிய பழைய தமிழ்ப் பெயரை மொழிபெயர்த்த வடமொழிப் பெயராகும்) என்பான் இறைவனாற் பாதுகாக்கப்பட்டு அக் கடல்கோளுக்குத் தப்பிக், கடல்கொண்ட குமரிநாட்டுக்கு வடக்கிருந்ததாகிய இத் தமிழ்நாட்டில் வந்து சேர்ந்து, கடல்நீராற் கவரப்பட்ட தமிழ்நான்மறைப் பொருள்களைப் பெயர்த்தும் வழங்கச் செய்து, நாகரிகத்தை நிலைநாட்டினான். இங்ஙனம் போந்த இவ் வு ண்மை வரலாறுகள் கொண்டு, சதபதபிராமணத்திற் குறிக்கப்பட்ட கடல்கோள் பண்டைத் தமிழ்நாடாகிய ய குமரிநாட்டின்கண் நிகழ்ந்ததேயாகுமென்பது தெள்ளிதிற் புலப்படுதலால், ஏதொரு சான்றும் இன்றி அது துருவத்தில் நிகழ்ந்ததாகுமென மொழிந்த பாலகங்காதர திலகருரை கொள்ளற்பால தன்றென விடுக்க.

வட

னிச் சதபத பிராமணமானது குருகுல பாஞ்சால குலமன்னர்க்குரிய தேயம் இதுவெனக் குறித்துரைப்பதோடு, ஜனமேஜயன் குருகுலவேந்தனாதலும்,5 சுருதசேனன் க்கிரசேனன் வீமசேனன் முதலியோர் அருச்சுனன்றன் பேரற்கு மக்களாய் ஜனமேஜயனுக்கு உட உடன்பிறந் தோராதலும்° தெரித்தோதுகின்றது. எனவே, சதபித பிராமணம் மாபாரதப் போர் நடந்தேறியபிற் பல நூற்றாண்டுகள் கழித்து இயற்றப் பட்ட நூலாதலும் நன்கு தெளியப்படும். சதபத பிராமணப் பகுதிகள் சில கி.மு. 2300 ஆம் ஆண்டிற்குப் பின் இயற்றப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/65&oldid=1590666" இலிருந்து மீள்விக்கப்பட்டது