உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

57

தலைச்

தாதல் செல்லாமை யாற், குமரிநாடு கடல்வாய்புக்கது கி.மு. 2400 இலும், பாரதப்போர் நிகழ்ந்தது கி.மு. 300 இலும் என்று கி.மு.300 கோடலே சாலப் பொருத்தமாம். மற்றுத், தலைச்சங்கமோ அக் கடல்கோளுக்கு முன் 1780 ஆண்டுகள் நடைபெற்ற தென்பதனை மேலே விளக்கிக் காட்டினமாதலால், அத் சங்கப்புலவருள் ஒருவரான முரஞ்சியூர் முடிநாகராயர், பாரதப் போரில் நின்ற பாண்டவர் படைக்குச் சோறு வழங்கிய உதியஞ்சேரலனை முன்னிலைப்படுத்துப் பாடியிருத்தல் காண்டு, அப் பாரதப்போர் நிகழ்ந்த கி.மு. 3101 இல் அஃதாவது இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்குமுன், அஃதாவது தலைச்சங்க நடுக்கால எல்லையில் அவர் இருந்தவராவ ரென்பது துணியப்படும். இங்ஙனமாக, இறையனாரகப் பொருள் உரைப்பாயிரத்தின் முச்சங்க வரலாற்றிற் குறிக்கப் பட்ட பாண்டிவேந்தரது தொகையுந், தலைச் சங்கத்தில் முரஞ்சியூர் முடிநாகராய ரென்பாரொரு பெரும்புலவர் இருந்தனரெனப் போந்த உண்மையும் வடநூற் சான்று களோடும் ஏனைப் பாபிலோனியர் யூதர் என்னும் பிறநாட்டார் வரைந்து வைத்திருக்கும் வரலாறுகளோடும் முழுதொத்து நிற்கக் காண்டலின், அவை தொன்றுதொட்டு வந்த மெய்வரலாறு களாதல் துணியற் பாற்றாம் என்பது.

ரு

க்

இனித் தலைச்சங்கத்தார்க்கு நூல் ‘அகத்தியம்' என்றும், இடைச்சங்கத்தார்க்கு நூல் “அகத்தியமுந் தொல் காப்பியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் பூதபுராணமும் என இவை என்றும் போந்த உரையில், 'அகத்தியம்' தலைச்சங்க நூலென்றதூஉம், 'தொல்காப்பியம்' இடைச் சங்க நூலென் றதூஉம் உண்மையாகா.‘அகத்தியம்” என்றொரு நூல் பண்டை காலத்தில் இருந்ததில்லை யென்பதை முன்னரே காட்டினாம். மற்றுத் ‘தொல் காப்பியமோ, குமரிநாடு கடல்கொள்ளப் படுமுன் ஆக்கப்பட்ட நூலென்பது பனம்பாரனார் கூறிய சிறப்புப் பாயிரத்தானும், அதற்கு ‘இளம்பூரணர்’ உரைத்த உரையானுந் தெளியப்படுதலின், அது தலைச்சங்ககாலத் தெழுந்த நூலேயாகு மல்லாமல் இடைச் சங்ககாலத்ததாகாது.

அற்றேல், தொல்காப்பியத்திற்குப் பாயிரஞ் செய்த பனம்பாரனார் "பல்புகழ் நிறுத்த படிமை யோனே” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/66&oldid=1590671" இலிருந்து மீள்விக்கப்பட்டது