உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

  • மறைமலையம் - 24

ஆசிரியர் தொல்காப்பியனாரைத் தவவொழுக்கத்தினராக வைத்து உயர்த்துக் கூறுதலானும் ‘படிமை' என்னுஞ் சொல் 'தவ

வொழுக்கத்தினை’ யுணர்த்துதல் சமண் மதத்தவர்

காணப்படாமையின்

66

7

நூல்களிலன்றி அவற்றிற்கு முற்பட்ட வடமொழி தென்மொழி நூல்களிற் அச் சொல்லால் உயர்த்துரைக்கப்பட்ட தொல்காப்பியனார் சமண் மதத்திற்கு உரியவரேயாதல் அதனாற் போதரலானும், சமண்நூலார் உயிர்த் தொகைகளை ஓரறிவு முதல் ஐயறிவு ஈறாகப் பகுத்து அவ்வைவகையுள் அவற்றை வைத்து அடக்குமாறுபோலவே தொல்காப்பியனாரும் ‘மரபியலில்' உயிர்த்தொகைகளை ஒன்றுமுதல் ஆறு அறிவு ஈறாகப் பகுத்து அவ்வகைகளுள் வைத்து அவை தம்மை அடக்கிக் கூறுதல் கொண்டு அவர் சமண்மதத்தினரென்பதற்கு மற்றுமொரு சான்று பெறப்படுத லானும் அவர் சமண்மதத்தினரேயாவர் என்பர் ஒரு சாரார். வடமொழி இலக்கண ஆசிரியரான பாணினி என்பவரும் 'ஐந்திரவியாகரணத்தைச்’ செய்த 'இந்திரன்’ என்னும் ஆசிரியரும் கி.மு. 300 ஆம் ஆண்டில் இருந்த ஒரே காலத்தவ ராயினுந், தொல்காப்பியனார் ஐந்திர வியாகரணத்தையே விரும்பிக் கற்றவராகலின், அவரை ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என்று பனம்பாரனார் ஓதினார்; ஓதவே, தொல்காப்பியனார் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாதல் பெறப்படும் என்பர் பிறிதொருசாரார். இவ்வா றுரைப்பவரே பிறிதோ ரிடத்தில், தொல்காப்பியம் கி.மு.நான்காம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகாது என முன்னொடுபின் முரணஉரை நிகழ்த்தினார். நிகழ்த்தினார். பின்னும் ஒருசாரார், இலங்கைத் தீவின் வரலாற்றில்" முதற் கடல்கோள் கி.மு. 2387 இலும், இரண்டாங் கடல்கோள் பாண்டுவாசன் அரசுபுரிந்த கி.மு 504 இலும், மூன்றாவதொன்று கி.மு. 306 இலும், நிகழ்ந்தமை குறிக்கப்பட்டிருத்தலின், இறையனாரகப் பொருட் பாயிரவுரையில் சொல்லப்பட்ட கடல்கோள்களைக் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்றாங் கடல்கோளாக வைத்துத் ‘தொல்காப்பியம்' அக்கடல் கோளுக்குச் சிறிது முன்னே செய்யப்பட்ட தெனவும், கி.மு.நான்காம் நூற்றாண்டில் இந்திய நாட்டின்மேற் படை யெடுத்து வந்த கிரேக்க அரசனான அலெக்சாந்தருடன் போந்த கிரேக்க வான் நூலாசிரியர்

8

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/67&oldid=1590675" இலிருந்து மீள்விக்கப்பட்டது