உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

59

ாகிய

கொணர்ந்த 'ஹோரா' என்னுங் கிரேக்கமொழியைத் தொல்காப்பியனார் 'ஓரை' எனத் திரித்துத் தமது நூலுள் வழங்குதலே அவர் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் இருந்தா ரென்பதற்குப் பின்னும் ஒரு சான்றாமெனவும் உரையாநிற்பர்." மற்றும் ஒருசாரார், கிறித்துபிறந்த முதல்நூற்றாண்ட அத்துணைப் பழையகாலத்தில் தமிழ்மொழி அத்துணை ஒழுங்கானதோர் உயர்ந்த நிலையை அ அடைந்திருத்தல் நம்பற்பால தன்றெனத் தங்கருத்து உரைத்துப்,பாண்டிமன்னர் வழங்கிய 'வட்டெழுத்துக்கள்' என்பன அசோகமன்னர் வழங்கிய 'பிராமி' எழுத்துகளினின்றே வந்தனவாகல்வேண்டு மாதலானும், 'பிராமி' எழுத்துக் களால் ஆக்கப்பட்ட கல்வெட்டுகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டன அன்மையால் வட்டெழுத்துக்கள் தோன்றிய பின்னன்றித் தமிழ்மொழி எழுத்துரு அடைந்திருத்தல் ஏலாமையானும் தொல்காப்பியம் ரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகுமென்று கோடலே பொருத்தமாம் என்பர். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.எட்டாம் நூற்றாண்டுவரையிற் சென்றஆயிரம் ஆண்டுகளில் வட்டெழுத் தாற்செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டுத்தானுந் தமிழ்நாட்டின்கட் காணப்படாமையின், கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குமுன் தமிழ்மொழி ஓர் ஒழுங்குபெற்ற நிலையை எய்தவில்லை யென்பதே திண்ணமாம் எனவும் இன்னார் உரையாநிற்பர்2 பின்னும் ஒரு பார்ப்பனர், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தொல்காப்பியம் இயற்றப்பட்டதென நாட்டுவான் புகுந்து, சிலப்பதிகாரத்திற்,

கி.பி.

புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர்

எனவும்,

கப்பத் திந்திரள் காட்டிய நூலின்

மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்.

(11, 98-99)

(11, 154 155)

எனவும் போந்த அடிகளிற் குறிப்பிடப்பட்டது ‘பத்ரபாகு என்னுஞ் சமண் முனிவராற் செய்யப்பட்ட ‘கல்பசூத்திரமே’ யாகுமென்றும், இக் கல்பசூத்திரமானது 'ஐந்திரம்' ‘ஜைநேந்திரம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/68&oldid=1590680" இலிருந்து மீள்விக்கப்பட்டது