உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் 24

என்னும் பெயர்களால் வழங்கப் படுவதாமென்றும், இதனைக் கடைமுறையாக வெளியிட்ட ‘பூஜ்யபாதர்' என்னுந் தேவநந்தியின் மாணாக்கரனான 'வஜ்ரநந்தி 'வஜ்ரநந்தி" என்பவர் கி.பி.440இல் மதுரையின்கண் ஒரு திராவிட சங்கம் நிலைநிறுத்தினராகலின் அச் சங்கத்தாருள் ஒருவரான தொல்காப்பியர் சமண்முனிவரே யாகல் வேண்டுமென்றும், சமண்முனிவராகிய தொல்காப்பியர் உணர்ந்தது பத்ரபாகு இயற்றிய கல்பசூத்திரமாகிய

ங்ஙனமாகப்,பார்ப்பனரும்

ஜைநேந்திரமே யாகல்வேண்டுமென்றும், இவ்வாற்றால் தொல்காப்பியர் கி.பி. 650 ஆம் ஆண்டளவில் இருந்தாராகற் பாலரென்றும் மொழிந்திட்டார்!3 இங்ஙனமாகப், பார்ப்பனரும் அவர் வழிச்சார்ந்தார் ஏனைச்சிலரும் ஒருவர்பின் ஒருவராய் எழுந்து, தமிழுக்குந் தமிழர்க்கும் இயற்கையாயுள்ள தனிப்பெருஞ் சிறப்பினையும் பழைய நாகரிகத்தினையுங் குறைத்து விடுதற்கும், தம்பால் வந்து கலந்த ஆரியரது கூட்டுறவினாலேயே தமிழர் ஓராயிர ஆண்டு களாகத்தான் சிறிது நாகரிகம் எய்தி வருகின்றார்களென்று காட்டுதற்கும் உண்மையல்லாத வைகளை உண்மைபோல் எழுதித் தமிழ் மக்ளை இழித்துப்பேசி வருகின்றார். தமிழரில் ஆராய்ச்சியுணர்வு வாயாதார் எல்லாம் பார்ப்பனர் உரைக்கும் இப் பொய்யுரைகளிற் சிக்குண்டு, தாமும் அவர்க்குத் துணையாய் நின்று தம்மினத்தவரை வேரறுக்குங் கருவியாய் அவர்க்குப் பயன்றந்து வருகின்றாராலெனின்; அவர் தம் பெற்றி எவ்வாறாயினும் ஆகுக. ஒப்புயர்வில்லாத் தொல்காப்பிய நூலின் உண்மைப் பழைமையைக் குறைப்பான் புகுந்த இப் பார்ப்பன ருரைகள் அத்தனையும் பொய்யுரை களாதலை முறையே வகுத்தாராய்ந்து காட்டுவாம்:

தொல்காப்பியத்திற்குப் பாயிரச்செய்யுள் உரைத்த பனம்பாரனார் "பல்புகழ் நிறுத்த படிமை யோனே" என்பதில் தொல்காப்பியனாரைப் படிமையோன் என்று கூறினமை யானும், ‘படிமை' என்னுஞ் சொல் சமண் நூல்களிலன்றி வேறு வடமொழி தென்மொழிப் பழைய நூல்களில் தவவொழுக்கத் திற்குப் பெயராய் வழங்காமை யானுந் தொல்காப்பியர் சமணரேயாதல் வேண்டுமென்றார். கூற்றை முதற்கண் ஆராய்வாம். 'படிமை' என்னுஞ் சொல் ‘ப்ரதிமா' என்னும் வடசொல்லின் திரிபாகுமென்பது எல்லார்க்கும் உடன்பாடாம்; இது ‘படிவம்' எனவுந் தமிழிற் றிரிந்து வழங்கும். “மேவிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/69&oldid=1590685" இலிருந்து மீள்விக்கப்பட்டது