உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

61

சிறப்பின் ஏனோர் படிமைய" என்னுஞ் சூத்திரவுரையில் (தொல்காப்பியம், பொருள், 30), உரையாசிரியர் இளம்பூரணர் “படிமை' என்பது 'ப்ரதிமா’ என்னும் வடமொழித்திரிபு; அது வ தேவர்க்கு ஒப்புமையாக நிலத்தின்கட் செய்து அமைத்த தேவர்மேல் வந்தது” என்று உரை கூறியவாற்றால் ச்சொல்லின் உண்மை தெளியப்படும். படவே, 'படிமை என்பது கடவுளர்க்குப் பிரதியாக அஃதாவது கடவுளரை யொப்ப அமைத்த வடிவங்களை உணர்த்துதல் பெற்றாம். பெறவே, இச்சொல் முதலில் ஒரு தெய்வத்தோடு ஒத்த வடிவத்தையும், பின்னர்த் தெய்வவடிவம் போல் வாராகிய அருந்தவத்தோரையும் அதன்பின் அவ்வருந்தவத் தோர்க்குரிய தவவொழுக்கத்தையும் உணர்த்துதலும் பெற்றாம்.

“பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்."

என்புழிஅச்சொல் தெய்வ வடிவத்தினையும்,

(சிலப்பதிகாரம், 15, 158)

“கூறினை பெருமநின் படிமை யானே'

(பதிற்றுப்பத்து, 74, 28)

(புறநானூறு, 349)

“என்புழி அது தெய்வ வடிவத்தோ டொத்த தவவொழுக்கத்தினையும்,

இஃதிவர் படிவம் ஆயின்"

என்புழித் தவவொழுக்கத்தின் பாலதான நோன்பினையும் “தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே.'

(குறுந்தொகை, 156)

என்புழித் துறந்த பார்ப்பனரின் தவவொழுக்கத்தினையும் அஃதுணர்த்துதல் காண்க. "கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்” என்னும் முல்லைப்பாட்டில் 37ஆம் அடியினால் அந்தணரிற் காவியாடை யுடுத்தாரின் தவவடிவத்தைப் படிவம் என்னுஞ்சொல் உணர்த்துதலும் நன்குவிளங்காநிற்கும். மேற்காட்டிய குறுந்தொகைச் செய்யுளால் அவ் வந்தணத் துறவோர் முக்கோலுந் தண்ணீர்க்கரகமுங் கைக்கொண்டிருப்ப ரென்பதூஉம் இனிது புலனாம். கலித்தொகையிற்போந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/70&oldid=1590690" இலிருந்து மீள்விக்கப்பட்டது