உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த

62

  • மறைமலையம் - 24

“எறிதரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்

உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல்அசைஇ வேறோரா நெஞ்சத்துக்

குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர்!”

(பாலைக்கலி, 8)

என்பதனாலும் பண்டைக் காலத்துத் தண்டமிழ் நாட்டு அந்தணரில் துறவொழுக்கத்தின் பாலராய் நின்றார் தவவடிவம் நன்கெடுத்து மொழிந்திடப்பட்டமை காண்க. ஆசிரியர் தொல்காப்பியனாருந் தமது காலத்திருந்த அந்தணர்க்குரிய வடிவங் கூறுகின்றுழி,

“நூலே கரகம் முக்கோன் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய”

(மரபியல், 70)

இல்லறத்

என்று ஓதுதலால், அக்காலத்து அந்தணரில் தாருங்கூடத் தவவடிவங் கைக்கொண் டிருப்பரென்பது பெற்றாம்.

பெறவே, அக்காலை அந்தணர் கொண்ட தவவடிவம் அப்பெற்றித்தாயது என்னையென்பது ஆராயற்பாற்று.

பண்டைத் தமிழ்மக்கள் காணவுங் கருதவும்படாத முழுமுதற் கடவுளைக் காணவுங் கருதவும் எளிதாம்படி தம்மை யொத்த ஒரு மக்கள் வடிவில்வைத்து வழிபடலாயினர். அங்ஙனம் மக்கள் வடிவில் வைத்து அவனை வழிபடினும், அவன் மக்களுள் ஒருவனாம் போலுமெனத் தம்மனோர் மயங்கிவிடாமைப் பொருட்டு, உலகத்தோற்றத்தில் கட்புலனாம் விழுப்பொருள்களையே அவன்றன் திருவுருவத்திற்குப் பல்வேறு உறுப்புகளாக்கினர். உலகத்தில் நடைபெறும் ஒழுக்கங் களெல்லாம் ஒளியுடைப் பொருள்களின் உதவியால் நடைபெறக் காண்டலின், அவ் வொளியுடைப் பொருள்களை அப் பெருமானுக்குக் கண்களாகக் கருதினர். உலகின்கட் காணப்படும் ஒளியுடைப் பொருள்கள்: ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்றுமேயாம்; ஆகவே, சிவபிரானுக்கு ஞாயிறு வலக்கண்ணாகவுந், திங்கள் இடக்கண்ணாகவுந், தீ நெற்றிக் கண்ணாகவுங் கொள்ளப் பட்டன. இம்மூன் றொளியுடைப்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/71&oldid=1590692" இலிருந்து மீள்விக்கப்பட்டது