உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

பொருள்களும்

3

63

றைவனுக்கு மூன்று கண்கள் போல்

ளங்குவதோடு, அருளொளியினனாகிய அவனுக்குத் திருமேனி போலவும் பொலிதலால் அம்மூன்றும் அவ் வொப்புமை பற்றி அம் முழுமுதற் கடவுளாகவே வைத்து வணங்குதலும், வாழ்த்து தலுஞ் செய்யப்படும். இது பற்றியே ஆசிரியர் தொல் காப்பியனார்,

கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

(புறத்திணை இயல், 33)

என ஓதினார். இச் சூத்திரத்திற்கு இளம்பூரணர் மெய்யுரை கண்டிலர். நச்சினார்க்கினியர் 'கொடிநிலை' என்பதற்கு 'வெஞ்சுடர் மண்டிலம்' எனவும் 'வள்ளி' என்பதற்குத் 'தண்கதிர் மண்டிலம்’ எனவும் மெய்யுரை கண்டுமொழிந்தனரேனுங், ‘கந்தழி’ என்பதற்கு ‘ஒருபற்றுக் கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்' என்று ஒருவாற்றாற் பொருந்தாவுரை கூறினார். ‘கந்தழி’ என்று முழுமுதற் கடவுளை மட்டுமே உணர்த்துவ தாயின் அவர் அதற்குக் கூறியவுரை பொருந்துவதேயாம். மற்றுக், கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் மூன்றனை வாழ்த்தும் வாழ்த்துரையுங் கடவுள் வாழ்த்தோ டொப்பக் கருதுமாறு வரும் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் மேற்காட்டிய சூத்திரத்தில் அருளிச்செய்தலின், அம் மூன்றுந் முழுமுதற் கடவுளாகா என்பது ஆசிரியர் கருத்தாதல்பெற்றாம். பெறவே, முழுமுதற் கடவுளாகாமல் முழுமுதற் கடவுளோடு ஒருபுடையொப்பக் கருதப்படுங் ‘கந்தழி' என்பதற்கு 'முழுமுதற் கடவு ளிலக்கணமாகிய ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங்கடந்த பொருள்' என்பதனை ஏற்றுதல் ஆசிரியர் கருத்தறிந்த உரையாகாமையுந் தெற்றென விளங்கும். அற்றேல், மற்றென்னோ அதற்கு மெய்யுரையெனிற் கூறுதும்: 'கந்தழி’ என்றது ‘தீப்பிழம்பினையே' யாம்; அஃது அப்பொருள் தருமாறு யாங்ஙனமெனிற்; 'கந்து' எனுஞ்சொல் ‘பற்றுக்கோடு' என்னும் பொருட்டாதல், “மறங் கந்து ஆக நல்லமர் வீழ்ந்து' (புறநானூறு, 93) என்பதனாலும் அதனுரையாலும் அறியப் படும். 'அழி’ என்பது அழிப்பது; எனவே, 'கந்தழி' என்பது 'தான் கொண்ட பற்றுக் கோட்டினைத் தானே அழிப்பது' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/72&oldid=1590693" இலிருந்து மீள்விக்கப்பட்டது