உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

  • மறைமலையம் - 24

பொருடருவதாகும். இனித், தீயானது தான்பற்றிய விறகினையுந், திரி நெய்யினையும் அழித்துவிடுதல் எவரும் அறிந்ததேயாம். அதனாற், ‘கந்தழி' என்பது தீம்பிழம் பேயாயிற்று. மேலும், ஞாயிறு திங்கள் என்னும் இரண்டு ஒளியுடைப் பொருள்களோடு இயைபுடையது அனற்பிழம்பே யல்லது பிறிதின்மையின், ‘கந்தழி' என்பதற்கு அவ்விரண் டோடு இயைபு சிறிதுமில்லா வேறுபொருள் உரைத்தல் ஆசிரியர் கருத்துக்கு முற்றும் முரணாமென்க.

அற்றாயின், ஞாயிறு தீ திங்கள் என்னும் வெளிப்படைச் சொற்களாற் கிளவாமற், கொடிநிலை கந்தழி வள்ளி என்னுந் திரிசொற்களால் ஆசிரியன் அவற்றைக் கிளந்தது என்னை யெனின்; ஞாயிறு தீ திங்கள் என்னுஞ் சொற்கள் கற்றார் முதற் கல்லாதார் ஈறான எல்லாரானும் வழங்கப் படுதலின் அச்சொற்கள் ஒளியுடைய அப்பொருள்களின் கடவுட்டன்மை

யின்

ளாளி

நினைவுறுத்தமாட்டா. ஆகலான்: அரு யுருவினனாகிய இறைவன் அவ் வொளியுடைப் பொருள் களைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு அவற்றின்கண் விளக்கித் தோன்றி எல்லா உயிர்களின் அறிவையும் மறைக்கும் புறவிருள் அகவிருள் இரண்டனையும் ஒட்டி அவைதமக்கு அவ் வறிவை விளங்கச் செய்தல் குறித்து, அம் மூன்றுங் கடவுட்டன்மை யுடையவாதல் தெரிப்பார் அவை தம்மைக் கொடிநிலை கந்தழி வள்ளியென்னும் பெயர்களாற் சிறந்தெடுத்துக் கூறினார். அற்றேல், அச்சொற்கள் கடவுட் L டன்மையினைக் குறிக்குமாறு யாங்ஙனமெனிற் காட்டுதும்: 'கொடிநிலை' என்னும் இருமொழித் தொடரிற் ‘கொடி' என்பது கிழக்குத் திசையினை யுணர்த்துதல்,

பொய்தீர் உலகம் எடுத்த கொடி மிசை மையறு மண்டிலம் வேட்டனள்.

(கலித்தொகை, 141)

என்று உரைகாரர் நச்சினார்க்கினியர் ஆண்டெடுத்துக் காட்டிய செய்யுளால் நன்குவிளங்கும். விளங்கவே, கீழ்த்திசைக்கண்ணே வந்து நிற்குங் கதிரொளியை அஃதுணர்த்துதல் புலனாம். திங்களும்இல்லாத இரவின் எல்லையெல்லாங் கண்ணொளியை மறைத்த இருளால் அறிவொளியும் மறைபட்டு அயர்ந்துறங்கிய உயிர்த் தொகைகள் அத்தனையுங், கிழக்கின்கட் கதிரொளி வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/73&oldid=1590694" இலிருந்து மீள்விக்கப்பட்டது