உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

65

நிலைபெற்ற அளவானே தன் கண்ணொளியுங் கருத் தொளியும் ஒருங்கு விளங்கப்பெற்று முயற்சி யுடையவாதல் கண்டாமன்றே. இங்ஙனமாக உயிர்ப் பன்மைகளின் அறிவும் முயற்சியும் விளங்கி நடைபெறுதற்குக் கீழ்த்திசைக்கண் எழுந்து நிலையும் ஞாயிறு ஏதுவாதலின் அக் கீழ்த்திசைக் கதிரொளி கடவுட்டன்மை யுடையதென்பது அறிவுறுத்துதற்கே அதற்குக் ‘கொடிநிலை’ என்னுஞ் சொல்லைப் பேரறிவு மிக்க ஆசிரியன் வழங்கு வானாயினன். ஞாயிறு என்னும் வழக்குச்சொல் கீழ்த்திசை மேற்றிசை இரண்டினும் நிற்குங் கதிரொளிக்குப் பொதுப்பெயராகலானும், மேற்றிசைச் சென்ற ஞாயிறு விரைவில் மறைந்து புறவிருள் அகவிருள் களை வருவித்தலின் அது கடவுட்டன்மை யுடைய தாகாமை யானுங், கடவுட்டன்மை யுடையதென வைத்து வாழ்த்துதற்கு ஏற்புடையது கீழ்த்திசை ஞாயிறே யென்பதனை வலியுறுத்து வான்வேண்டி, அப்பொருள் பயக்குங் 'கொடிநிலை' என்னுஞ் சொல்லை ஆசிரியன்அதற்கு விதந்தெடுத்துக் கூறினா னென்பது. இதனானன்றே ஆ ஆசிரியர் நக்கீரனார்,

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு

என்று திருமுருகாற்றுப்படையிலும், ஆசிரியர் இளங்கோவடிகள்,

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதுங் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான்

என்று சிலப்பதிகார முகத்தினுங் கீழ்த்திசை, எழூஉஞ் செங்கதிர்ச், செல்வனை வாழ்த்துவாராயினர் என்க.

நருப்பு,அழல்,

இனி, மேலது போலவே தீ, நெருப்பு, அழல், தழல் முதலான சொற்கள் மக்கள் எல்லாரானும் வழங்கப்படுதல் நோக்கி அவை அதன் கடவுட் டன்மையினை யுணர்த்துதற் கேற்ற 'கந்தழி' என்னுஞ் சொல்லால் அதனைக் குறிப்பா னாயினன். தனக்கொரு பற்றுக்கோடின்றித் தான் எல்லா வற்றிற்கும் ஒரு பற்றுக் கோடாய் நிற்பதூஉந், தான்பற்றிய உயிரின் பருப்பொருளறிவினை யழித்து அவ் வறிவினை

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/74&oldid=1590695" இலிருந்து மீள்விக்கப்பட்டது