உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மறைமலையம் - 24

நுண்ணிதாக்கி அதனைத் தன்றன்மையாய் நிற்கச் செய்வதூஉந், தான் எதனானும் பற்றப்படாத அருவுமாய்க் கட்புலனாயினுந் தொடப்படுவதல்லாத உருவுமாய் இவ்வாறு இருதிறமும் விராய அருவுருவாய் நின்று திகழ்வதூஉம் எல்லாம் வல்ல இறைவனியல்பாதல்போலத், தீப்பிழம்புத் தானிருத்தற்கு ஒரு பற்றுக்கோடு வேண்டு மென்பது இன்றாய் எல்லா உயிர்ப்பொருள்களி னிருப்புக்குந் தானொரு பற்றுக்கோடாய் அவற்றினுள்ளும் ஏனைப்பொருள்களினுள்ளும் விரவி நிற்றலானுந், தான் பற்றிக்கொண்டு தோன்றும் விறகு திரி நெய் முதலியவற்றின் பருப்பொருட்டன்மையை அழித்து அவற்றை நுண்பொருளாக்குவதுடன் தான் பற்றி எரியுங்காறும் அவற்றைத் தன் நிறமாக வயங்கச் செய்தலானுந், தான் புலப்பட்டுத் தோன்றாவழி எங்குமுள்ள அருவாய் விளக்கு விறகு முதலியவற்றிற் புலப்பட்டுத் தோன்றியவழியும் எவரானும் பிடிக்கப்படுவதல்லாத உருவுமாய் இவ்வாறு அருவும்,உருவுமாம் இருதிறமும் ஒருங்கு கலந்த இயல்பிற்றா மாகலானுந் தீ கடவுட் டன்மை யுடையதாதல் துணியப் படும். இப்பெற்றித்தாந் தீம்பிழம்பின் இலக்கணத்தை உணர்த்துதற்கு வாய்ப்புடைத்தாதல் பற்றியே ஆசிரியன் ‘கந்தழி’ என்னுஞ் சொற்கொண்டு அதனையுங் கடவுள் வாழ்த்தின்பாற் படுப்பானாயினான் என்க. இனி,ஞாயிறு திங்கள் என்னும் இருமண்டிலங்களுங்கூடத் தீத் திரளையே யாகலானும், தீ யொன்றுமே அவற்றின் விளக்கத்திற்கு ஏதுவாகலானுங் காடிநிலை' என்னும் ஞாயிற்றிற்கும் 'வள்ளி' என்னுந் திங்களுக்கும் இடையே 'கந்தழி’ என்னுந் தீப்பிழம்பின் வாழ்த்தை ஆசிரியன் வைத்திட்டா ா ரென்பதூஉம் அறியற்பாற்று.

இனித், திங்கள், நிலா, அம்புலி என்னுஞ் சொற்கள் எல்லாரானும் வழங்கப்படுதலின் அவை அவருள்ளத்தே கடவுள் நினைவுத் தோற்றுவியா எனக் கருதி, அந்நினைவினைத் தோற்றுவித்தற்கு ஏற்ற ‘வள்ளி' என்னுஞ் சொல்லால் அதனை ஆசிரியன் குறிப்பானாயினன். கதிரொளி வெம்மைகலந்த ஆற்றலை4 உலகுயிர்களுக்குத் தாராநிற்ப, நிலவொளி தண்மை கலந்த ஆற்றலை அவற்றிற்கு வழங்கி அவற்றைப் பேணி வளர்த்தலின் 'வள்ளி' எனப் படுவதாயிற்று. அற்றேற்,

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/75&oldid=1590696" இலிருந்து மீள்விக்கப்பட்டது