உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் - 25 -

பல

அற்றேல், வஞ்சனை பொய் என்னும் பொருள்களில் மாயம் மாயை என்னுஞ் சொற்கள் வடமொழி யுள்ளும் வழங்கக் காண்டு மாலெனின்; வடமொழியுள் வழங்குதல்கொண்டே அவற்றை வடசொல் என்றல் அமையாது; வடசொற்கள் பல தமிழுள் வழங்குதல் பற்றி அவற்றைத் தமிழ்ச்சொல்லென் றுரைத்தல் ஆகாமை ஆகாமை போலத் தமிழ்ச் சொற்கள் வடமொழியிற் காணப்படுதல் பற்றி அவற்றை வடசொல் லென்றலும் பொருந்தாது. அற்றாயின் ‘மாயம்’ ‘மாயை’ என்னுஞ்சொற் தமிழேயாம் என்பது எற்றாற் பெறுதுமெனின், அவை கருமை எனப் பொருள்படும் மா என்னுந் தமிழ் உரிச்சொல்லி னடியாகப் பிறத்தலானும் அப்பொருள்படும் மா என்னும் முதனிலை வடமொழியிற் காணப்படாமையானும் அவை தமிழ்ச் சொல்லே யாதல் தேற்றமாம். அஃதொக்கு மாயினும், எல்லா மொழிக்கும் பொதுவாகிய ‘மாயை என்பதற்குப் 'பிறப்பகம்' என்னும் பொருளோடு, 'இறப்பகம்' என்னுந் தமிழுக்குரிய பொருளும் கூறியவாறென்னை யெனின்; L மாயை எனுஞ் சொல் எல்லா மொழிக்கும் பொதுவென்று கூ று கின்றுழியே அது தமிழுக்கும் உரியதென்பது பெறப் படுதலானும், அங்ஙனம் உரியதாகவே 'மாய்' என்னும் முதனிலைப்பற்றி அதற்கு ‘இறப்பகம்' என்று பொருளுரைத் தலும் பொருந்துமாகலானும் அவ்வாறு கூறினா மென்க. எனவே, அறிவில் பொருள்களின் தோற்ற வொடுக்கங்கட்கு இடமாவது மாயை யென்பது பெற்றாம்.

இனி, மாயையை ஈண்டு அடிகள் இருள் என்ற தென்னை? இருள்போல் நின்று உயிர்களின் அறிவு செயல் வேட்கைகளை மறைப்பது ஆணவமலமன்றோ வெனின்; ஆணவம் இருள்போல் மறைத்தலும், மாயை ஒளிபோல் விளக்குதலும் உடைய வென்பது உண்மையேயாயினும், ஆணவம் உயிர்களின் மட்டுமேயன்றி L மாயையினும் ஊடுருவி நிற்றலால், மாயை அவ்வாணவத்தின் சேர்க்கையால் ஒரோவழி உயிர்களை மறைத்தலும் மயக்குதலுஞ் செய்யுமியல்பிற்றாய் நிற்கும். இது

“நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர் வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமல னுக்கோர் சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமுமு யிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்குமுஞ் செய்யு மன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/101&oldid=1589293" இலிருந்து மீள்விக்கப்பட்டது