உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

69

என்னுஞ் சிவஞானசித்திச் செய்யுளிற்போந்த “வைத்த தோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யுமன்றே" என்பதனால் நன்கு விளங்கும், அஃதேல் ஆணவம் உயிர்களின் அறிவு செயல் வேட்கைகளைத் தாம் மறைப்பக் காண்டுமன்றி, மாயையையும் அங்ஙனம் மறைப்பக் கண்டிலாலெனின், மாயையின் காரியப் பொருள்களான செம்பு இரும்பு முதலியவற்றிற் களிம்புந் துருவுமாயும், கரிவளியில் முடைநாற்றமாயும், உயிர்களின் ஊனிலும் மறஞ்செடி கொடிகளின் தசையிலும் அழுகல் நாற்றமாயும் புலப்படுவது ஆவணவமலத்தின் செயலேயாம். வ்வாறு மலத்தின் செயல் மாயையில் ஆங்காங்குக் காணப் படுதலாற்றான் அஃது ஒரோவிடத்து அருவருக்கற்பாலதா யிருப்பதன்றி, அதன்செயல் முதுனைத்து நிகழாத இடங்களில் அம்மாயை தூயதாய் விரும்பத்தக்கதாகவேயிருக்கு மென்க. அற்றேல், மலத்தின் செயல் முனையாத மாயாகாரியப் பொருள்கள் யாவையோ வெனின்; முத்துப் பவளம் நீலம் பச்சை மாணிக்கம் வைடூரியம் வைரம் கோமேதகம் புருடராகம் என்னும் ஒன்பது மணிகளும், பொன் வெள்ளி முதலியனவும், சலவை பளிங்கு முதலான கற்களும் இவற்றோ டொத்தனவும் மலத்தின் செயலில்லாத தூய பொருள்களாம் என்க. எனவே, மலத்தின் சேர்க்கையானும் செயலானும் மாயை ஒரொவொரு கால் பழிக்கத் தகுவதாகின்றதேயாயினும் அது தன்னியல்பில் தூயதாய், அதனால் இறைவற்கு ஒரு சத்தியாய், உயிர்களை மலத்தினின்றும் விடுவித்தற்கு இன்றியமையாக் கருவியாய், விரும்பத்தக்கதாய்த் திகழ்வதொன்றே கடைப்பிடிக்க. இதுபற்றி யன்றே, சைவ சித்தாந்த முதலாசிரியரான மெய்கண்டதேவ நாயனார்,

“மாயா மனுவிளக்கா மற்றுள்ளங் காணாதேல்

ஆயாதாம் ஒன்றை அதுவதுவாய் - வீயாத போற் வன்னிதனைத் தன்னுள் மறைத்தொன்றாங் காட்டம் றன்னைமல மன்றனைத றான்

என்று அருளிச் செய்வாராயினர்.

அற்றாயினும்,

ஆணவமலத்தின் சேர்க்கையால் அறிவை மறைத்தலும் அருவருக்கற்பாலதாம் வாலாமையும் ஒரோவொருகால் அஃது உடையதாதல்பற்றி, ஈண்டுத் திருவாதவூரடிகள் மாயை யினையும் மாயா காரியமாகிய உடம்பினையும் உடம்பின் அகக் கருவி புறக்கருவிகளையும் இழித்துப் பேசுவாராயினர். ஆயினுந்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/102&oldid=1589294" இலிருந்து மீள்விக்கப்பட்டது