உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

❖ - 25❖ மறைமலையம் - 25

தீயோன் ஒருவனால் ஏவப்பட்டுத் தீது செய்யும் பிறனொருவனை கழ்ந்து கூறுங் கூற்றெல்லாம் கரவின்றி அது செய்வானை விட்டுக் கரவினால் அதன்கண் ஏவினானையே சென்றடைதல் போல, மாயா காரியமான உடம்பையும் உலகத்துப் பொருள் களையும் பழித்துப் பேசும் மொழிகளெல்லாம் உண்மையில் அவற்றின் வாலாமைக்குக் காரணமான ஆணவமலத்தன் மேலவாகவே செல்லும்.

இனி, நல்வினை தீவினைகளைச் செய்தற்கும் அவற்றின் பயன்களை நுகர்தற்கும் அம்முகத்தால் ஆணவமலத்தின் வலி சுருங்குதற்குமே இவ்வுடம்பு வந்தமையால், இவ்வுடம்பின் றோற்றத்திற்கு ஏதுவாவன அறம் பாவம் என்று தெரிப்பார், ‘அறம் பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி' என்று அருளிச் செய்தார்.

‘அறம்’ அறு என்னும் முதனிலையிற் றோன்றி அறியாமை யினையும் அது காரணமாகச் செய்யும் தீவினையினையும் அறுப்பதென்னும் பொருட்டாம்.

உயிர்களின் உடம்பிலுள்ள ஊன் அவ்வளவும் உயிர்த் துகள்களால் அமைக்கப்பட்டிருத்தலானும், அத்துகள்களி னின்று கழிக்கப்படும் கழிவுகள் அத்துணையும் அழுக்கு களாயிருத்தலானும் ‘எங்கும் புழுவழுக்கு மூடி' என்றார்.

'மலஞ் சோரும் ஒன்பது வாயிற் குடிலை' என்பதிற் சோரும் என்னுஞ் சொல் வடியும் என்று பொருள்படுதலை 'அயறு சோரும் இருஞ் சென்னிய*” (* புறநானூறு-22) என்பதன் உரையிற் காண்க.

66

ஒன்பது வாயில் என்பன : செவிவாயில் இரண்டு, கண் இரண்டு, மூக்கின் புழை இரண்டு, வாய் ஒன்று, கருவிடும் வாயில் ஒன்று, எருவிடும் வாயில் ஒன்று.

'மலங்குதல்' கலங்குதல் என்னும் பொருட்டாதல் பிங்கலந்தையிற் காண்க.

விலங்கும்' என்பதற்கு ‘எதிரில் நின்று தடுக்கும்' என்று பொருளுரைப்பர் புறநானூற்றுரைகாரர்.* (* புறநானூறு -230)

-

கடை இழிவு; "கடையரே கல்லாதவர்”* என்புழிப் பரிமேலழகியார் கடையர் 'இழிந்தார்' என்று பொருளு ரைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/103&oldid=1589295" இலிருந்து மீள்விக்கப்பட்டது