உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

71

மாய இருளைக் கயிற்றாற் கட்டித் தோல் போர்த்துப் புழு அழுக்கு மூடிச் செய்த குடிலைச் சிறியேற்கு நல்கி என இயைக்க; ங்ஙனம் இயைக்குங்கால் செய்த என்னும் ஒரு சொல் வருவிக்கப்படும்.

இறைவன் உயிர்கட்கு உடம்பைத் தந்தது ஆணவமலத்தின் சேர்க்கையை ஒழித்தற் பொருட்டேயாம். இக் கருத்தறியாது உடம்பையும் அதன்கண் அமைந்த ஐம்புல இன்பங்களையுமே பெரிதெண்ணி நடந்தால், உடம்பு மலம் வடியும் வாலாமை யுடைமையாலும் ஐம்புல நுகர்ச்சிகள் இன்பந்தருவன போற்றோன்றினும் அவ்வின்பம் நிலையுதலின்றி விரைவில் மறைந்து போகப் பின்னர்த் துன்பத்தையும் வருவித்தலானும் அவை பயன்படாதவழி இழிக்கற் பாலனவே யென்பது ஈண்டுத் தெளிவித்தாராயிற்று. 'தேவரீர் தந்த உடம்பாகிய கருவியைப் பயன்படுத்துமா றறியாது அக்கருவியின் வழிச்சென்று மயங்கு வேனுக்கு அம்மயக்கந் தீர்த்தற் பொருட்டு இந்நிலத்தின் மேற் குருவடிவிற் போந்து கடவுளரானுங் காண்டற்கரிய திருவடி களைக் காட்டி அடியேனை ஆண்டருளிய தேவரீர் பேரருட் டிறம் இருந்தாவாறென்னை!' என்பது இவ்வடிகளின் கருத்தாகக் கொள்க.

65

70

75

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே

இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்த நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/104&oldid=1589296" இலிருந்து மீள்விக்கப்பட்டது