உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

  • மறைமலையம் - 25

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்கும்எங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

80 தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந்

தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே.

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே - களங்கம் இல்லாத ஒளிவிரிந்த மலரின் ஒளியே, தேசனே - குருவே, தேன் ஆர் அமுதே - இனிமை நிறைந்த அமுதமே, சிவ புரனே - கைலை நாட்டிற்கு உரியவனே, பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே - மும்மலப் பிடிப்பை அறுத்து என் அறிவை வளர்க்கும் மேலோனே, நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே-அன்போடு ருளுஞ் செய்து நெஞ்சிலிருந்த பொய் கெட அந்நெஞ்சை

-

டு அகலாது நிலையாய் நின்ற பேர் அருள் வெள்ளம் நிறைந்த பெரிய யாறே, ஆரா அமுதே - தெவிட்டாத அமிழ் தமே, அளவு இலாப் பெம்மானே - அளவுபடாத இயல்பினை யுடைய பெருமானே, ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே ஆராயாதவர் உள்ளத்தின்கண் வெளிப்படாது மறையும் அறிவொளி வடிவினனே, நீராய் உருக்கி என் ஆர் உயிராய் நின்றானே - நீராக என் நெஞ்சை உருகச்செய்து எனது அரிய உயிராய் நின்றவனே, இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே இன்பமும் துன்பமுமாகிய இரண்டும் இல்லாத வனே அவையிரண்டும் உள்ளவனே, அன்பருக்கு அன்பனே - அன்பராயினார்க்கு அன்பனாய் உள்ளவனே, யாவையுமாய் அல்லையும் ஆம் சோதியனே - எல்லாப் பொருள்களுமாய் அவையல்லாத வேறுமாய் நிற்கும் சுடரொளியானே, துன் இரு ளே - செறிந்த இருளாய் இருப்பவனே, தோன்றாப் பெருமை யனே - புலனாகாத பெருமையுடையவனே, ஆதியனே - எல்லா - வற்றிற்கும் முதலாய் இருப்பவனே, அந்தம் நடு ஆகி அல்லானே - முடிவும் நடுவும் ஆகி அவை அல்லாதவனுமா யிருப்பவனே - ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே - வலிய இழுத்து என்னை அடிமை கொண்ட எம் தந்தையாகிய பெருமானே, கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/105&oldid=1589297" இலிருந்து மீள்விக்கப்பட்டது