உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

-

73

தம் கருத்தின் நோக்கு அரிய நோக்கே - கூரிய மெய்யறிவினால் உளங்கொண்டு உணர்வாருடைய கருத்தினாலும் நோக்குதற்கு அரிய நோக்கமே, நுணுக்கு அரிய நுண் உணர்வே -கூரிதாய் உணர்தற்கும் அரிய நுண்ணிய உணர்வே, போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே இறத்தலும் பிறத்தலும் பொருந்தியிருத்தலும் இல்லாத தூயோனே, காக்கும் எம் காவலனே - எவற்றையுங் காக்கும் எம் அரசனே, காண்பு அரிய பேர் ஒளியே - காண்டற்கு அரிய பெரிய ஒளியே, ஆற்று இன்ப வெள்ளமே - நல்லாற்றிற் பெருகும் இன்பப் பெருக்கே, அத்தா - அப்பனே, மிக்காய் எல்லாவற்றினும் மேலோனே, நின்ற தோற்றச் சுடர் ஒளியாய் - நிலைபெற நின்ற தோற்றத்தினை யுடைய சுடரும் ஒளியாயும், சொல்லாத நுண் உணர்வாய் - சொல்லுதற் கேலாத நுண்ணிய உணர்வாயும், மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறுவூ ஆம் தேற்றனே மாறுபாட்டினையுடைய இந் நிலவுலகத்தின்கண் வேறுவேறாய் வந்து அறிவாய் விளங்கும் தெளிவினனே, தேற்றத் தெளிவே தெளிவினிற் றெளிவே, என் நினைவினுள்ளே ஊற்றாய்ச் சுரக்கும் உண்டற்கினிய அரிய அமிழ்தே, உடையானே - எப்பொருளையும் எவ்வுயிரையும் உடையவனே என்றவாறு.

நிறஞ் சிறந்த இதழ்கள் விரியும் மலரின் ஒளி காண்டற்கு மிக இனிதாயிருத்தலின் ‘மலர்ச்சுடரே' என்றருளிச் செய்தார்; மாசற்ற சோதிவிரியும் மலர் ஒன்று உளதாயின் அதனொளியை இறைவனொளியோ டொப்பித்த லமையும் என்பது கருத்து.

‘தேசன்' என்பது குரு வெனப் பொருள்படும் ஒரு வடசொல்; இவ் வடசொல்லுக்கு நாட்டையுடையவன் அல்லது அரசன் என்னும் பொருளும் உண்டு.

'தேன்' இனிமைப் பொருட்டாதல் திவாகரத்தான் உணர்க. இச்சொல் ‘தேம்' எனவும் நிற்கும்.

அமுது' அம்ருத என்னும் வடசொற் சிதைவு; இறப்பில் லாமைக்கு ஏதுவாவதொரு மருந்து.

‘சிவபுரம்’ திருக்கைலாயம்; வடநாட்டிலுள்ள காசிக்கும் இப்பெயர் உண்டு.

‘பாசம்’ பச் என்னும் முதனிலையிற் பிறந்து கட்டுதற்குக் கருவியாகிய கயிற்றினை உணர்த்தும். புறத்தே யாடு மாடு

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/106&oldid=1589298" இலிருந்து மீள்விக்கப்பட்டது