உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் 25

முதலிய உயிர்களைக் கட்டுங் கயிறு கட்டுங் கயிறு போல அகத்தே உயிர்களைக் கட்டி நிற்கும் அறியாமையும் பாசம் என்று சொல்லப்படும் மிகப் பழையதான இருக்குவேதத்தில் இச்சொல் அறியாமையைச் செய்யும் மலத்திற்குப் பெயராய்ப் பலகாலும் எடுத்து வழங்கப்படுதலின், சைவசித்தாந்த நூல்களுள்ளும் ச்சொல்லே அவ்வறியாமை மலத்தைக் குறித்தற்குச் சிறந்த பெயராகப் பண்டு தொட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இச்சொல் இத்துணைப் பழமையாதலை உணராத ஏகான்ம வாதிகளும் பிறரும் இதனை விடுத்து அதற்கு வேறு வேறு பெயரிட்டு வழங்குவர். இனி, உயிர்களைக் கட்டுறுத்துதற்கண் இருவினைகளும் மாயையும் ஒரோவழி ஆணவமலத்தை ஒத்தலின், அதுபற்றி அவையும் பாசம் என்று பொதுப்பட வழங்கப்படும். இதற்குப்,

ன்

“பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு பசுத்தன்மை நீக்கியப் பாச மறுத்தாற் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே"

என்னுந் திருமந்திரத் திருப்பாட்டும்

“பாசம் ஆனவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங்

கருணையால் ஆசைதீர்த்தடியார் அடிக்கூட்டிய அற்புதம் அறியேனே”

என்று இத் திருவாசகத்திற் போந்த திருப்பாட்டுஞ் சான்றாதல் காண்க.,

‘பாரிக்கும் ' வளர்க்கும் எனப் பொருள்படுதல் “பகலென் னும், பண்பின்மை பாரிக்கும் நோய்"* (திருக்குறள்- 86-1)என்பதற்குப் பரிமேலழகியார் கூறிய வுரையிற் காண்க. மும்மலப் பிணிப்பை முறை முறையே விடுவிக்கு முகத்தால் உயிர்கட்கு அறிவு வளரச் செய்தலின் இங்ஙனங் கூறினார். 'ஆரியன்' மேலோனெனப் பொருள்படும் ஒரு வடசொல்.

66

'நேசம்' - அன்பு.* (* பிங்கலந்தை) ஈண்டுக் கூறிய அன்பு அருள் என்பவற்றின் இலக்கணங்களைப் புறநானூற்றுரை யாசிரியர் அன்பாவது தன்னாற் புரக்கப்படுவார் மேல் உளதாகிய காதல்" எனவும், "அருளாவது ஒன்றின் துயர் கண்டாற் காரணம் இன்றித் தோன்றும் இரக்கம்” எனவுங்* (*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/107&oldid=1589300" இலிருந்து மீள்விக்கப்பட்டது