உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

75

புறநானூறு 5) கூறமாற்றான் உணர்க. பரிமேலழகியாரும் "தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார் மேற்செல்வதாய் அருள் தொடர்புபற்றிச் சொல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவ தாகலின்” என்று கூறுவர். *தன் திருவடிகளையே பற்றுக் கோடாகக் கொண்ட தன் அடியவர்க்கு அத்தொடர்பு பற்றி இறைவன் அன்புடைய னாதலின் 'நேசம் புரிந்து' என்றும், அவர் இறைவற்கு அடிமைத்திறம் பேணும் வகையறியாது மலத்துள் அழுந்திக் கிடந்த காலத்தும் அவர்மேற் றொடர்பு பற்றாத இரக்கங் கொண்டு அவர் மலத்தால் வருந்தும் துயர் தீர்த்தற் பொருட்டு அவர்க்குப் பேருதவிபுரிந்து வருதலின் ‘அருள்புரிந்து' என்றும் அருளிச்செய்தார்.

பெயராது' எனுஞ் சொல் பேராது எனத் திரிந்தது; "பேரா இடும்பைத் தரும்” என்பதும்* காண்க.

அளவுபடாத அறிவும் ஆற்றலும் பரப்பும் உடைய னாதலின் ‘அளவிலாப் பெம்மான்' என்றார். பெருமான் என்னுஞ் சொல் பெம்மான் என்றாயிற்று.

தம்மியல்பும் தம்மையுடைய தலைவனியல்பும் ஆராய்ந்து ாராதவர் உள்ளம் அறியாமையிற் பற்றப்பட்டு மிகுதியும் இருண்டுக் கிடக்கு மாதலின், எங்கும் உள்ள இறைவன் இருண்ட அவருள்ளத்தும் இருப்பனாயினும் ஆண்டு விறகின் கண் மறைந்திருக்குந் தீப்போல் இருப்பனாயினும் ஆண்டு விறகின்கண் மறைந்திருக்குந் தீப்போல் இருப்பனாகலின் ‘ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே' என்று அருளிச் செய்தார். ‘ஓர்த்தல்’ ஆராய்தல் எனப் பொருள்படுதலை "ஓர்த் துள்ளம் உள்ளது உணரின்”* (திருக்குறள் 76-7) என்புழிக் காண்க. அதன் எதிர்மறை

ஓராமை.

இறைவன் எஞ்ஞான்றும் இன்பவுருவினனாய் நிற்றலி னாலும், ஏனை உலகத்துப் பொருள்களானாதல் உயிர்களா னாதல் அவன் அடைவதோர் இன்பம் வேறின்மையினாலும் இன்பமேயாய் நிற்கும் அவன்மாட்டுத் துன்பமும் உடன் நிற்றற்கு ம் இன்றாகலினாலும் ‘இன்பமுந் துன்பமும் இல்லானே' என்று அருளிச் செய்தார்.

இனித் தன் திருவடியினைத் தலைக்கூடிய அடியார்க்கு உலகத்தாலும் உலகத்துப் பொருள்களாலும் உயிர்களாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/108&oldid=1589301" இலிருந்து மீள்விக்கப்பட்டது