உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் - 25

வரும் இன்ப துன்பங்களையெல்லாம் அவரைத் தானாக்கிக் கொண்டிருக்கும் முதல்வனே ஏன்றுகொள் னாகலின் "இன்பமுந் துன்பமும் உள்ளானே” என்றருளிச் செய்தார். இவ்வுண்மை,

“இவனுலகில் இதம்அகிதஞ் செய்த எல்லாம்

இதம்அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும் அவன்இவனாய் நின்றமுறை ஏகன் ஆகி

அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றம் சிவனும்இவன் செய்தியெலாம் என்செய்தி யென்றுஞ் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும், பவம்அகல உடனாகி ஏன்றுகொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே"

என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டிற் றெளிவுறுத்தப் பட்ட மை ம காண்க. இவ்வாறு அடியார்க்கு வரும் இன்ப துன்பங்களைத் தான் ஏன்றுகொள்ளும் இத்துணையேயன்றி, மற்றுத் தனக்கு இவை எஞ்ஞான்றும் இல்லான் இறைவனென்று ஓர்ந்து கொள்க.

தனக்கென இன்பதுன்பங்கள் இல்லாதான் இவற்றைத் தான் ஏன்று கொள்ளுதல் தான் அன்பருக்கு அன்பனாய் இருக்குமதனால் என்று உணர்த்துவார் ‘அன்பருக் கன்பனே' என மேலதனை அடுக்கவைத் தோதினார்.

இனி, அறிவில் பொருள்களெல்லாம் இறைவன் அசைவித் தாலன்றி அசையாமையானும், அறிவுப் பொருள்களான உயிர்கள் பண்டு தொட்டே ஆணவத்தான் அறிவுமறைப்புண்டு கிடத்தலின் அவை அவனால் உடம்புங் கருவிகளும் உலகங் களும் இன்பதுன்ப நுகர்ச்சியும் பெற்றாலன்றி அறிவு விளங்கப் பெறாமையானும் அவை இரண்டனையும் அசைவித்தற் பொருட்டும் அறிவித்தற் பொருட்டும் அவன் அவற்றோடு உடனாய் நிற்றல்பற்றி ‘யாவையுமாய்’ என்றும், அங்ஙனம் அவற்றோடு உடனாய் நிற்பினும் முதல்வனியல்பு அவ்விரண்ட னியல்பின் மேற்பட்டதாய் வேறாய் நிற்றலின் அது தெரிப்பான் வேண்டி ‘அல்லையுமாம்' என்றும் அருளிச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/109&oldid=1589302" இலிருந்து மீள்விக்கப்பட்டது