உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

77

உலகத்தின்கட் காணப்படும் எல்லா ஒளிகளும் இறைவன் றிருவுருவின் விளக்கமாதலின் ‘சோதியனே' என்றார். இது

“நாயகன் கண்நயப்பால் நாயகி புதைப்ப எங்கும் பாய்இரு ளாகிமூடப் பரிந்துல கினுக்கு நெற்றித் தூயநேத் திரத்தினாலே சுடரொளி கொடுத்த பண்பின் தேயம்ஆர் ஒளிகள் எல்லாம் சிவன்உருத் தேசதென்னார்”

என்னும் சிவஞானசித்தித் திருச்செய்யுளால் நன்கு விளங்கும்.

இனி, எல்லா உயிர்களையும் மறைக்கும் ஆணவ வல்லிரு ளாற்றான் மறைக்கப்படாது தான் அதனுள்ளும் மறைந்து நிறைந்திருத்தலின் ‘துன் இருளே' என்றார்; துன் இருள் செறிந்த இருள்; “துன்னல் குறுகலுஞ் செறிவுஞ் சொல்லும்” என்பது திவாகரம்.

இறைவன்றன் பெருமைத் தன்மைகளை எத்துணை காலமிருந்து அறியப்புகினும் அவை வரையறையின்றியே விரிந்து போதலின் அவை புலனாகா என்பார் ‘தோன்றாப் பெருமையனே' என்றார்.

எப்பொருட்கும் முதலாயிருத்தலின் ‘ஆதியன்' என்றோ தப் படுதலால் அவன் நடுவும் ஈறும் உடையனாம் என்பது பெறப்

படினும் உண்மையில் அவை வ யுடை யனல்லன் என்பது

உணர்த்துவார் ‘அந்தம் நடுவாகி யல்லானே' என்றார். அற்றேல், அவன் நடுவும் ஈறுமாய் நிற்றல் எப்போதெனின், தன் அன்பர்க்கு அருள் செய்தற்பொருட்டு எடுக்கும் உருவங்கள் ஒரோவொரு காற்றோன்றி மறைந்து போதலின் அவன் அப்பொழுது மட்டுமே அவ்வியல்புடையனா மென்க; மற்றுத் தன் உண்மை நிலையில் அவை யுடையனல்லனாம் என்றே துணிக. அவ்வாறுரைப்பினும் தோற்றக் கேடுகள் இலனாகிய முதல்வற்கு அவையிரண்டும் ஒரோவொருகால் உளவாமெனப்பட்டு இழுக்காமாலெனின், மலமறைப்பு முழுதும் நீங்கி எத்துணைதான் பேரறிவுடையராய் நிற்பினும் அடியாருங்கூட அவன்றன் வியத்தகுசெயலின் பரப்பெல்லாம் உணரமாட்டுவா ரல்லர்; அல்லராகவே அவன் றன் உருவங்கள் வருமாறும் போமாறு மெல்லாம் யாங்ஙனம் அறிய வல்லார்! இவரறிவுக்கு அவனுருவங்கள் தோன்றுதலும் மறைதலும் போற் காணப்படினும் தன்னிலையில் அவை அங்ஙனம் மாறுவனவல்ல.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/110&oldid=1589303" இலிருந்து மீள்விக்கப்பட்டது