உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

  • மறைமலையம் 25

இதனை நம்மனோ ரறிவுக்குப் புலனாம் ஒரு நிகழ்ச்சியினும் வைத்துக் காட்டுவாம். ஞாயிற்று மண்டிலம் நாம் உறையும் இந்நிலவுலகத்தைச் சூழச்சென்று பகலிரவுகளை விளைப்பது போற் காணப்படினும், உண்மையான் ஆராயும்வழி இந்நிலவுல கமே ஞாயிற்றினைச் சுற்றிச்சென்று அம்மாறுதல் களைத் தோற்றுவிக்கின்றன; ஞாயிறு தன்னிலை யிற் றனது பேரொளி விளக்கத்திற்கு ஏதொரு வேறுபாடும் இல்லாதிருப்பவும் அஃதுடையதுபோற் றோன்றல் நமது சிறுமையானன்றிப் பிறிதன்று; அதுபோல், முதல்வனும் நம்ம னோர்க்கு அவ் வேறுபாடுகள் உடையன்போற் காணப்படுதல் கொண்டு அவன் அவை உண்மையிலுடையனென்றல் பெரிதும் பிழைபாடு உடைத்தாம்.வியத்தகும் இவ்வியல்பினனாம் இறைவனதுண்மை தெரித்தற்கன்றோ திருஞானசம்பந்தப் பிள்ளையார்,

66

‘ஆட்பா லவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில்அள வில்லை கிளைக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார்”

என்று திருவாய் மலர்ந்தருளினார். இங்ஙனமே சிவஞான சித்தியாரிலும்,

“பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்கள் அல்லான் அந்தமும் ஆதி யில்லான் அளப்பிலன் ஆத லானே எந்தைதான் இன்ன னென்றும் இன்னதாம் இன்ன தாகி வந்திடான் என்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே"

என்று போந்தமை காண்க.

66

6

"கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்ற தென்னை? மெய்யறிவுடையார்க்கும் இறைவன் அறியப்படாலெனின் பின்னை அவன் உளன் என்று பெறப் படுதல் ஏற்றாலெனின்; கூர்த்த மெய்யறிவுடையார் இறைவ னோடு ஒன்றாய் நிற்கப் பெறுதலானும், தான் செய்வன வெல்லாம் அவன் செயல் வழியே நடைபெறுதலானும் அவர் அவனை வேறாய்ப் பிரிந்து நின்று அவனைச் சுட்டி உணர்வார் அல்லர். இது குடம் இது படம் என்று சுட்டி உணர்வார் நம்மனோர், இறைவன் அவைபோல் அங்ஙனம் சுட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/111&oldid=1589304" இலிருந்து மீள்விக்கப்பட்டது