உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

❖ - 25❖

மறைமலையம் – 25

பல வேறு தன்மைகளையுடைய இந்நிலத்தின்கண் பல வேறு தன்மைகள் உடையரான மக்கள் தத்தம் அறிவுக் கெட்டிய மட்டும் பல வேறு தன்மைகள் உடைய தெய்வங்களைப் படைத்திட்டுக்கொண்டு வழிபட்டுப், பின்னர்த் தம் அறிவு வளருந் தோறும் தாம் முன்னே வழிபட்டது தெய்வம் அன்றெனக் கைவிட்டு, அதனின் மிக்க தொன்றனை வைத்து வழிபாடாற்றிப்/ பின்னர் அதனையுங் கைவிட்டு அதனிற் சிறந்த வேறொன்றனைத் தழுவி, இறுதியாக எல்லாவற்றையுங் கழித்து, அறிவாய் எஞ்சி நின்ற முழுமுதற் கடவுளைத் தெளிந்து வழிபட்டு வீடுபேற்றின்பந் தலைக்கூடுவராகலின் ‘மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே' என்றருளிச் செய்தார். 'மாற்றம்' மாறு என்னும் முதனிலையிற் பிறந்து மாறுபாட்டினை உணர்த்தும். 'தேற்றன்' தெளிவினையுடை யோன், தெளியப்பட்டவன் என்று இருபொருளும் உரைத்துக் கொள்க.

'தேற்றத் தெளிவு' தெளிந்தார்க்கு உயிர்க்குயிராய் நின்று நுகரப்படும் தெளிவு

85

90

95

வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேயோ என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளின் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் - வேறு வேறு திரிவுபாடுகளையுடைய தசையாலான உடம்பி னுள்ளே கிடக்கப்பொறேன், எம் ஐயா - எம் தலைவனே, அரனே- சிவபெருமானே, ஓ என்று என்று ஓவென்று அலறிக்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/113&oldid=1589306" இலிருந்து மீள்விக்கப்பட்டது