உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

-

81

-

கூறி, போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆனார் - வணங்கிப் புகழ்ந்தபடியாய் இருந்து உள்ளீடு இல்லாத நினைவு சொற் செயல்களெல்லாம் கெட்டு மெய்ந்நினைவு சொற் செயல்கள் உடையராயினார், மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே - திரும்பவும் இவ்வுலகின்கண் வந்து இரு வினைக்கு ஏதுவான பிறவியைக் கூடாமல், கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே - வஞ்சித்துக் கொள்ளுதலைச் செய்யும் ஐம்புல அவாக்களுக்கும் இருப்பிடமான சிறிய மனையாகிய வ்வுடம்பின் கட்டை அழிக்க வல்லவனே, நள் இருளின் நட்டம் பயின்று ஆடும் நாதனே நடு இருளிலே திருக் கூத்தினைப் பலகாலும் ஆடும் தலைவனே, தில்லையுள் கூத்தனே தில்லை மாநகரின்கட் கூத்து இயற்றுவோனே, தென்பாண்டி நாட்டானே தெற்கேயுள்ள பாண்டிநாட்டை யுடையவனே, அல்லல் பிறவி அறுப்பானே - துன்பத்திற்கிடமான பிறவி வேரை அறுப்பவனே, ஓ என்று - ஓ என்று அரற்றி, சொல்லற்கு அரியானை சொல்லிப் பாராட்டுதற்கு ஆகாத அருமைப்பாடு உடையவனை, சொல்லி - இயன்றமட்டும் பாராட்டி, திருஅடிக் கீழ்ச் சொல்லிய - அவன் திருவடிக்கீழ் நின்று சொல்லிய, பாட்டின் பொருள் அறிந்து சொல்லுவார் - செய்யுட் பொருளை உள்ளுணர்ந்து சொல்ல வல்லவர், சிவபுரத்திற் செல்வர் - சிவ நகரின்கட் செல்வார்கள், பல்லோரும் ஏத்தப் பணிந்து சிவன் அடிக்கீழ் உள்ளார் - பலரும் வழுத்தாநிற்கத் தாம் பணிவுடை யராய்ச் சிவபிரான் திருவடியின் கீழ் இன்புற்று இருப்பர் என்றவாறு.

-

-

L

வேறு விகாரம் - வேறாகிய விகாரம்; இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கண் வல்லெழுத்துமிக்கு ‘வேற்று விகாரம்’ என முடிதல் “அல்லது கிளப்பின் எல்லா மொழியுஞ் சொல்லிய பண்பின் இயற்கையாகும்” என்பதிற் ‘சொல்லிய' என்பதனால் முடிக்கப்படும் என்பர் உரையாசிரியர் இளம்பூரணர்* (* தொல்காப்பியம் எழுத்து 425) பலவகைத் திரிவுபாடுகளாவன; நரைதிரை மூப்புப் பிணி சாக்காடு என்பன.

‘விடக்கு’தசை யெனப் பொருள்படுதல் “வீழ்ந்தார் விடக்கு உணிய" என்பதன் உரையிற்* (* புறப்பொருள் வெண்பா மாலை வெட்சி 10) காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/114&oldid=1589307" இலிருந்து மீள்விக்கப்பட்டது