உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

  • மறைமலையம் 25

றைவன் திருவடியைத் தலைக்கூடினார்க்கு இவ்வூனு டம்பு ஒரு பொறையாயும் சிறைக்களம் போன்றும் இருத்தலின் வேற்று விகார விடக்குடம்பினுட்கிடப்ப, ஆற்றேன் என்றருளிச் செய்தார்.

'அரன்' தீவினைகளை அரிப்பவன்; இச்சொல் தமிழ் வடமொழி இரண்டற்கும் பொது.

'புகழ்ந்திருந்து'

புகழ்ந்து இருந்து என இரண்டு சொல்லாகப் பிரித்துப் ‘புகழ்ந்தபடியாய் இருந்து' என உரைக்க; புகழ்ந்திருந்து என ஒரு சொல்லாக வைத்துப் புகழ்ந்து எனப் பொருளுரைத்தலுமாம்.

பொய்யுணர்வாவது பொருள் அல்லாதனவற்றைப் பொருளென்று உணரும் மயக்க உணர்ச்சி. அது “மறு பிறப்பும் இரு வினைப்பயனும் கடவுளும் இல்லை எனவும், மற்று மித்தன்மையவுஞ் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந் நூல் வழக்கெனத் துணிதல்” என்று பரிமேலழகியார் அதனை ளக்கியவாற்றான் அறியப்படும். ஆசிரியர் திருவள்ளுவ

நாயனார்,

6

“பொருள்அல் லவற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு

என்று அருளிச்செய்தார்*(* திருக்குறள் மெய்யுணர்தல் 1) இதற்கு மறுதலையான மெய்யுணர்வு இன்னதென்பதனை அவரே மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் நன்கு விளக்கி யருளினமை காண்டு தெளிந்து கொள்ளப்படும்.

அவ்வதிகாரத்துட்போந்த,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு

திருவெண்பாவால்

“வீட்டிற்கு நிமித்த

என்னுந் காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது” என்று உணர்ந்து கொள்க. மெய்ப் பொருளைக் காணபது மெய்யுணர்வு; அம்மெய்ப்பொருள்தான் "தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மை யாற் றன்னை யொன்றுங் கலத்தல் இன்மையிற் றூய்தாய்த், தான் எல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/115&oldid=1589309" இலிருந்து மீள்விக்கப்பட்டது