உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் - 25 -

‘நள் இருள்’ நடு இருள். இப்பொருட்டாதல் “நள்ளிருட் கண் வந்தார் நமர்” என்பதன்* (* புறப்பொருள் வெண்பா மாலை வெட்சி 6) உரையிற் காண்க. இனிச், செறிந்த இருள் என்று பொருளுரைப்பினுமாம்; “நளியென் கிளவி செறிவுமாகும் என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்* (* புறநானூறு 34) நளி என்னுஞ் சொல்லின் முதனிலை நள்.

நட்டம்-கூத்து. திவாகரத்துட் காண்க.

பயின்று ஆடும் - பலகாலம் பழகி ஆடும். பலகாலும் ஒரு செயலைச் செய்தல் பயிலலாகு மென்பது "வேண்டுமொழி பயிற்றி”* (* தொல்காப்பியம் உரியியல் 25) என்பதற்கு உரைகார் கூறிய பொருளான் அறியப்படும். எத்தனையோ கோடி ஆண்டுகளாக இறைவனோடுதலிற் ‘பயின்றாடும்' என்றார்.

எல்லா உயிர்களும் உணர்வுஞ்செயலும் அற்று அறியாமை வல்லிருளில் அழுந்திக்கிடக்கும் அக்காலத்தும் இறைவன் தான் சிறிதும் வாளா இருத்தலின்றி அவற்றின் பொருட்டுத் தான் ஓவாது ஆடுதலின் ‘நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே’ என்றார். இங்ஙனம் அவன் ஆடுதல் எற்றிற் கோ வெனின், ஆணவ இருளிற் கிடந்த உயிர்களை எழுப்பிப் பிறவிவட்டத்தில் உய்த்தற்பொருட்டும், பிறிவிவட்டத்திற் சுழலும் உயிர்களும் இடையிடையே அயர்வு தீர்தற் பொருட்டு அவற்றை நாடோறும் உறக்கத்தின்கண் அவ்விருளிற் செலுத்திச் சிறிதுநேரஞ் சென்ற துணையானே எழுப்பிவிடுதற் பொருட்டும், அவை அவ்விருளில் அயர்ந்துறங்குங்காலும் அவையிருந்து அறிவுபெறுதற்கு இ டமான உடம்புகளைச் செவ்வனே இயக்குதற்பொருட்டும், சிற்றறிவும் சிறு தொழிலு முடைய உயிர்களால் ஆக்கவும் நடத்தவும் மாட்டாத எண்ணிறந்த உலகங்களையெல்லாம் ஆக்கி நடத்துதற் பொருட்டும் அங்ஙனந் திருக்கூத்து இயற்றுகின்றானென்று உணர்க. புறத்தே உலகத்திலும் அகத்தே

ம்பினிடத்தும் இறைவன் இங்ஙனந் திருக்கூத்து இயற்றும் இயல்பு நமது உடம்பின்கண் நிகழும் நிகழ்ச்சிபற்றித் துணியப்படும். எல்லா உயிர்களும் விழித்திருக்கையில் தலையின்கண் உள்ள மூளை யைப் பற்றிக்கொண்டு ஐம்புல உணர்வுகளும் அவற்றின் வழி வரும் வரும் பகுத்துணர்வும் உடையனவாய்ப் போதருகின்றன; மற்று, உறக்கம்வந்து கூடுமிடத்தோ மூளையைவிட்டுக் கீழ்

இறங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/117&oldid=1589311" இலிருந்து மீள்விக்கப்பட்டது