உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மறைமலையம் - 25

முதல் பத்தடிகளால் இறைவன் றிருவடிகட்கு வாழ்த்தும் வெற்றியும் கூறிய அடிகள் ‘ஈசனடிபோற்றி' என்பது முதல் 'மலைபோற்றி’ என்பது ஈறாக வணக்கங் கூறினார். அதன்பிற் 'சிவன் அவன்' என்பது முதல் ‘உரைப்பனியான்' என்பதீறாக வருபொரு ளுரைத்தார். நூன்முகத் துரைக்கப்படுவதாகிய மங்கலவாழ்த்து வாழ்த்தும் வணக்கமும் வருபொருளுரைத் தலுமென மூவகைப்படுமாதலின்* (வாழ்த்து வணக்கம் வருபொருளிவற்றினொன் றேற்புடைத்தாகி முன் வரவியன்று என்பது தண்டியலங்காரம்) இந்நூலுக்கு மங்கல வாழ்த்துப் போல் நிற்பனவாகிய இவ்விருபஃதடிகளானும் அவற்றை முறை யே கூறினார். அற்றேல், வாழ்த்திற்கும் வணக்கத் திற்கும் இடையே வெற்றியொன்று கூறினாராலெனின், வெற்றித்திறம் படக் கூறுதலும் வாழ்த்தேயாகலின் அது வேறன்றென்க.

மங்கலவாழ்த்தின்பிற் கூறப்படுவதாகிய ‘அவையடக்கம்’ ‘கண்ணுதலான்'என்பது துவங்கி 'நின்பெருஞ் சீர் பொல்லா வினையேன் புகழுமாறொன்றறியேன்' என்பதனாற் கூறினார்.

அதன்பிற் ‘புல்லாகி' என்பது துவங்கி “எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்” என்பது ஈறாக உயிர்கள் ஓரறிவு நிகழ்தற்கு இடமான உடம்பிலிருந்து ஆறறிவு விளக்கத்திற்கு இடஞ்செய்யும் உடம்புகள் வரையிற் புகுந்து புகுந்து மேல் வருமாறு விளங்கக் கூறினார். உடம்புகள் இங்ஙனம் ஒன்றினொன்று சிறந்த அமைப்புடையவாய் வரும் இயல்பினை இஞ்ஞான்றை உடம்புநூல் வல்லார் தெளிய ஆராய்ந்து ஓதினும் பண்டைக்காலத்தில் இதனை நம் திருவாதவூரடிகள் போல் விளங்கக் கண்டு கூறினார் உரையாசிரியர். அதுவேயுமன்றி, உயிர்களின் அறிவு விளங்குந் தரத்திற்கு ஏற்ப உடம்புகளும் மேன்மேற் சிறந்த அமைப்பு டையனவாய் வரு மென்பது அடிகள் கருத்தாக, இக்கருத் தறியாத இஞ்ஞான்றை உடம்புநூலார் உயிரின் அறிவு வளர்ச்சி யினை அறவே விடுத்து உடம்புகள் மேன்மேற் சிறந்த அமைப்பு டையவாய் வருதலையே பெரிதும் ஆராய்ந் துரைத்து, நெல்லை விட்டு ‘உமிக்குற்றிக் கைசலிப்பாரோ’ டொப்பராயினார். அதுகிடக்க.

அதன்பின், 'மெய்யே யுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்' என்பதனால் பிறவிகளில் உழன்று தூயராயி னார்க்கு இறைவன் தன் திருவடிப்பேறு நல்கி ஆண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/119&oldid=1589313" இலிருந்து மீள்விக்கப்பட்டது