உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

87

கொள்ளுமாறும், ‘உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா' என்பதனால் அங்ஙனம் அவன் திருவடி தலைக் கூடுவார்க்கு அவன் தமதகத்தே ஓங்காரவுருவாய் நிற்கக் காணு மாறும், ‘வேதங்கள் ஐயாவெனவோங்கி' என்பதனால் இவ்வாறு தூயராயினார்ககல்லது ஆரிய நான்மறைகளாலும் அவன் அறியப்படாதவாறுங் கூறினார்.

அதன்பின் ‘வெய்யாய்' என்பது துவங்கி 'நல்லறிவே' என்பதீறாக இறைவன்வெம்மை மண்மை மெய்யொளி இன்பம் அறிவு என்னும் இயல்புகள் உடையனாதல் கூறினார். இவை தூயரானார்க்கு மட்டுமே விளங்குதலின் மேலதனோடு இயைபுடையவாயின.

அதன்பின் ‘ஆக்கம்’ என்பது துவங்கி ‘பிறந்த பிறப்பறுக் கும் எங்கள் பெருமான்' என்பது ஈறாக இறைவன் ஐந்தொழிலி யற்றி உயிர்களைத் தூய்மைசெய்து அவர்க்குப் பேரின்பம் நல்கி அவர்க்குப் பிறவியறுக்குமாறு கூறினார். மேற்சொன்ன இயல்புகளுடைய முதல்வன் அவ்வியல்புகளை உயிர்களினும் விளைவித்தல் வேண்டி இங்ஙனஞ் செய்தல் கூறினாராகலின் வை முன்னையவற்றோடு இயைபுடையவாயின.

அதன்பின் ‘நிறங்களோர் ஐந்துடையாய்' என்பது முதல் ‘தாயிற் சிறந்த தயாவான தத்துவனே' என்பதீறாக இறைவன் உயிர்களைப் பற்றிய இருளைத் தொலைத்தற் பொருட்டு ஐந்தொழிலியற்றிச் செய்யும் பேருதவியை நினையாமல், அவன் றந்த உடம்பினைத் தீமை செய்தற்கு வாயிலாக்கி அவர் அவனை மறந்து நிற்குமிடத்தும் அவன் அவர்மாட்டு வைத்த இரக்கத் தால் வலிய வந்து ஆட்கொண்டருளும் பேரருட்டிறத்தைக் கூறினார்.

அதன்பின் ‘மாசற்ற சோதி’ என்பதுமுதல் ‘உடையானே’ என்பதீறாக அத்துணை அருட்களஞ்சியமான ஐயனை அவன் எல்லாமாயும் அல்லவாயும் நிற்கும் பல பண்புகளையும் எடுத்துரைத்து வழுத்துமாறு கூறினார்.

இனி 'வேற்றுவிகார விடக்குடம்பு' என்பது முதல் ‘பல்லோரும் ஏத்தப்பணிந்து' என்பதீறாக அவனால் அடிமை கொள்ளப்பட்டு அவனை வழுத்தி அவனோடு ஒன்றுகூடப் பெற்றார்க்கு, இனி யிவ்வடம்பாற் பெறக்கடவது வேறின்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/120&oldid=1589314" இலிருந்து மீள்விக்கப்பட்டது