உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

  • மறைமலையம் - 25

யானும் கரை யிகந்த அவனது இன்பவெள்ளத்திற் றிளைத்தற்கு இஃதொரு தடையா யிருத்தலானும் இவ்வூனுடம்பை அவனரு ளால் விட வேண்டுமென்பதும், விழிப்பினும் உறக்கத்தினும் அவன் இவ்வுடம்பின் நெஞ்சத்தாமரைக்கண் நின்று ஓவாது இயக்கி உயிரை உடம்பின்கண் நிலைபெறச் செய்துவருதலின் அவனே இவ்வுயிரையும் உடம்பையும் வேறுபடுக்கற்பாலன் என்பதும், பின் நான்கடிளால் இத்திருவாசகச் செந்தமிழ்ப் பாடல்களின் பொருளுணர்ந்து சொல்வார்க்குச் சிவனடிக்கீழ் வைகும் பெரும் பயன் வருமென்பதுங் கூறினார்.

இது கடவுட்பராய முன்னிலைக்கண் வந்த பாடாண்

பாட்டு.

“ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலாற்

றரிபின்றி வருவது கலிவெண் பாட்டே

என்றார் ஆசிரியர் தொல்காப்பியனா ராகலின் (தொல் காப்பியம் செய்யுளியல் 154) இஃது அவ்வாறு வந்த கலிவெண் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/121&oldid=1589315" இலிருந்து மீள்விக்கப்பட்டது