உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

இரண்டாவது அகவல்

கீர்த்தித் திருவகவல்

(சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை) தில்லையில் அருளிச்செய்யப்பட்டது

சிவபெருமான் காணவுங் கருதவும் படாத தனது இயற்கை யைத், தன்னை ஓவாது நினைந்துருகும் அன்பர்க்குக் காணவுங் கருதவும்ஆம்படி வைத்தற்பொருட்டு எழுந்த பேரருட்டிறத்தால் ஆங்காங்கு அம்மெய்யடியார்க்குத் தனது அருட்திருவுருவு காட்டி அவரை ஆண்டருளின் அருட் பான்மையைப் புகழ்ந்து இத் திருவகவலில் திருவாதவூரடிகள் அருளிச்செய்கின்றாரா கலின், இது ‘கீர்த்தித் திருவகவல்' என்னும் பெயர்த்தாயிற்று. தில்லை மூதூர் ஆடிய திருவடி

5

பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோர் உலகும் துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் என்னுடை இருளை ஏறத் துறந்தும் அடியார் உள்ளத்து அன்புமீ தூரக்

குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும்

-

ல்

தி்ல்லைமூதூர் -தில்லையென்னும் பழைய ஊரின்கண். ஆடிய திருஅடி நடம் இயற்றிய அழகிய அடியால், பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி - பலவேறு உயிர்கள் எல்லா வற்றினுள்ளும் இடைவிடாது ஆடுவானாகி, எண் பல்குணம் எழில்பெற விளங்கி - அளவு குறிக்கப்படுதல் இல்லாத தன் பல குணங்களும் எழுச்சிபெற விளங்கி, மண்ணும் விண்ணும் வானோர் உலகம் - நிலவுலகத்திலும் வானுலகத்திலும் தேவர்கள் உறையும் ஏனை உலகங்களிலும், துன்னிய கல்வி

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/122&oldid=1589316" இலிருந்து மீள்விக்கப்பட்டது