உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

-

  • மறைமலையம் - 25

-

தோற்றியும் அழித்தும் செறிந்த கல்விப்பொருளைத் தோற்று வித்தும் பின்னர் அதனை அழித்தும், என்னுடை இருளை ஏறத் துரந்தும் - என்னுடைய அறிவைப்பற்றிய அறியாமையிருளை முற்றும் எறிந்தும், அடியார் உள்ளத்து அன்பு மீதூர - அடியவர் உள்ளத்தில் அன்பு நெருங்க, குடியாக்கொண்ட கொள்கையும் சிறப்பும் - குடியிருப்பாகக் கொண்ட விரதமும் தலைமையும் என்றவாறு.

6

மூதூர் - முதுமைஊர், பழமையாகிய ஊர், தில்லைமாநகர் ந்நிலவுலகத்திற்கு நெஞ்சத்தாமரை போன்றிருத்தலின் உயிர்களினகத்தேயுள்ள நெஞ்சத்தின்கண் இறைவன் ஓவாது நடமியற்றுமாறு போல இதன் கண்ணும் பண்டுதொட்டுத் திருக்கூத்து இயற்றுதலின் இதனைப் பழையஊர் என்றார்.

இனி உயிர்களின் அகத்தே இயற்றுந் திருக்கூத்து முந்தியதோ அன்றிப் புறத்தே தில்லையம்பலத்தில் இயற்றுந் திருக்கூத்து முந்தியதொவென்று ஆராய்ந்து பார்ப்புழி உயிர்கள் உடம்பினுட்புகாது இருளிற் கிடந்த அக்காலத்தும் தில்லையம்பலக்கூத்து நிகழ்தலானும், உயிர்கள் உடம்பை விட்டு விட்டுப் போக ஆண்டு நடைபெறுந் திருக்கூத்து இடையறவு படுதல் போலாது தில்லைக்கண்ட நிகழுங்கூத்து எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாய் நடைபெறுதலானும் ஆண்டு ஆடிய திருவடி யினாலேயே பின்னர் உடம்பினுட்புகும் உயிர்கள்பொருட்டு அவற்றின் நெஞ்சத்தாமரைக் கண்ணதான வெளியிலே அதனை இடைவிடாது இயற்றுவான் என்பது தெரிப்பார் ‘தில்லை மூதூர் ஆடிய திருவடி, பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி' என்றருளிச் செய்தார்.

பயிலுதல்

-

டைவிடாது இடை

ாது ஒன்றனைச் செய்தல்; “தில்லைச் சிற்றம்பலத்துப் பயில்கின்ற கூத்தன்" என்பதற்குத் தில்லைச் சிற்றம்பலத்தின்கண் இடைவிடாதாடுகின்ற கூத்தையுடையான் என்று பேராசிரியருரை கூறுதல் காண்க. (திருச்சிற்றம்பலக் கோவையார்18)

பல் குணங்களாவன; தன்வயத்தனாதல், தூய வுடம்பின னாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல் பாகவே பாசங்களி னீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்பமுடைமை எனவினவ* (திருக்குறள் 1,9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/123&oldid=1589317" இலிருந்து மீள்விக்கப்பட்டது