உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருவாசக விரிவுரை

91

என்று பரிமேலழகியார் காட்டிய எண் குணங்களும். “எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை என்று திருநாவுக்கரசு நாயனாரும் ரும்புயர்ந்த மூவிலைய சூலத் தினானை றையவனை மறையவனை யெண் குணத்தினானை” என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் அருளிச்செய்தமை காண்க. இக்குணங்களி னிருப்பு ஒருவாற்றான் அறியப்படுவதல்லது அவற்றின் பரப்பும் எல்லையும் எவரானும் அறியப்படாமையின் ‘எண்ணிர் பலகுணம்' என்றார். உயிர்களை உடம்புகளிற்புகுத்தி உலகங்களில் நடைபெறவிட்டு அவற்றிற்கு அறிவை எழச்செய்த பின்னன்றே அவை இறைவற்கு எண் குணம் உண்மையை அறிவவாயின. மற்று அவ்வுயிர்கள் பிறவிக்கு வாராமல் ஆணவ விருளிலேயே அழுந்திக் கிடந்தன வாயின் இறைவற்கு அக்குணங்கள் உளவாதலை அறிவார் யார்! முதல்வன் உயிர்கள் பொருட்டு இயற்றும் ஐந்தொழின்முகத்தான் அவை அறிவு விளங்கி அவன் குணங்களின் விளக்கத்தை அறிதல்பற்றிப் ‘பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி' என்பதன் பின் ‘எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி' என்று அருளிச்செய்தார். 'விண்’ என்பது நிலவுலகத்திற்கு நேரே மேல் உள்ள இந்திரன் நாடு; இந்திரன் மழைக்கடவுளாதலின் மேகமண்டிலமே இந்திரனா டென்று புனைந்துரைக்கப்படுகிறது.

6

'வானோர் உலகு உலகு' என்பன நான்முகன் திருமால் உருத்திரர் சீகண்டருத்திரர் அநந்தர் சதாசிவர் முதலான கடவுளர் உலகங்கள்.

மண்ணும் விண்ணும் வானோருலகும் வானோருலகும் உள்ளாரிற் சதாசிவர் அநந்தர் முதலாயினார்க்கு உள்நின்றும், சீகண்ட ருத்திரர்க்கு நேர்நின்றும், திருமால் முதல் மண்ணுலகிலுள்ள மக்களீறான மற்றையோர்க்கெல்லாம் குருவடிவில் நின்றும் இறைவன் ஒருவனே எல்லார்க்குங் கல்வியறிவினைத்

தோற்றுவிப்பானென்பது,

“நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமலம் ஒன்றினையும் அந்நிலையே உண்ணின் றறுத்தருளிப் - பின்னன்பு

மேவா விளங்கும் பிரளயா கலருக்குத்

தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் - பூவலயந்

தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/124&oldid=1589318" இலிருந்து மீள்விக்கப்பட்டது