உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

  • மறைமலையம் - 25

முன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - அன்னவனுக் காதிகுண மாதலினால்" என்னும் போற்றிப் பஃறொடைத்

(60-63)

திருமொழியால் இனிது விளக்கப்பட்டமை கண்டுகொள்க.

பற்று அறாத உயிர்களை மீண்டும் மீண்டும் மலத்தில் ஒடுக்குமித்தும், பற்று அற்ற உயிர்களைத் தன்திருவடிக்கட் கூட்டுமிடத்தும் தோற்றிய கல்விப்பொருள் அத்துணையும் அழித்தலின் 'துன்னிய கல்வி தோற்றியும்' என்பதனோ டமையாது, ‘அழித்தும்' என்றுங் கூறினார்.

-

ஏறத்துரந்தும் முற்றும் எறிந்தும்; எறிதலாவது உயிரைப் பற்றிய ஆணவத்தைப் பறித்து அப்பால் வீசுதல். ‘துரந்தும்’ என்பது இப்பொருட்டாதல் “வளி துரந்தக் கண்ணும்” என்பதன் உரையிற் காண்க* (புறப்பொருள் வெண்பா மாலை 9, 12)

மீதூர - நெருங்க; அன்பு நெருங்குதலாவது மிகுதியாய் எழுந்துதா னிருக்குமிடம் போதாமை நெரிதல். இப்பொருட் டாதல் "இடங்கழி நெருங்குதல் மீதூர லாகும்” என்னும் பிங்கலந்தைச் சூத்திரத்திற் காண்க.

L

'கொள்கை' விரதம் எனப் பொருள்படுதலை “ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை” என்பதன்* (புறநானூறு 26) உரையிற்காண்க. இனிக் “கொள்கையி னிருந்த” என்பதற்குத் 'தியானத்தோடிருந்த' எனவும் ‘துன்பம் உறாதிருந்த’ எனவும் பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார்*.(சிலப்பதிகாரம் 14,15) தலைமை; இப்பொருட்டா தலை "உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்” என்பதன் உரையிற் காண்க.* (புறநானூறு 72)

சிறப்பு

10

-

மன்னு மாமலை மகேந்திர மதனிற்

சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்

மன்னு மாமலை மகேந்திரம் அதனில் - நிலைபெற்ற பெரிய மலையாகிய மகேந்திரத்திலிருந்து, சொன்ன ஆகமம் முன்னொருகால் உமைப்பிராட்டியார்க்குச் சொல்லிய ஆகம நூல்களை, தோற்றுவித்தருளியும் - மீண்டும் வெளிப்படுத் தருளியும் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/125&oldid=1589319" இலிருந்து மீள்விக்கப்பட்டது