உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

-

மறைமலையம் - 25

பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடலினும் பழமையுடையததாலினாலும் பெரும்பான்மையும் வரலாற் றுண்மை வழுவாது கூறுதலினாலும் அதனையே மேற் கோளாகக் கொள்வேமாயினேம்) இவ்வாறு கடலினின்றும் மீட்ட ஆகமநூற் பொருளை இறைவன் மகேந்திர மலை யிலிருந்து மறித்தும் அறிவுறுத்தருளினானென அடிகள் பின்னுங் கூறுவர்; பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவுத்தர கோசமங்கையிலிருந்து அதனைத் திரும்பவும் அறிவுறுத் தருளினானெனக் கூறுவர்; இவ்விரண்டினுள் அடிகள் கூறுவதே கொள்ளற்பாலதென்க.

மகேந்திரமாமலை வடக்கே கஞ்சநாட்டில் பிருகாம் பூருக்குத் தென்மேற்கில் முப்பத்திரண்டு நாழிகை வழி கழித்திருக்கின்றது; அங்கே சிவபிரான் திருக்கோயில்கள் பல பழுதுபட்டுக் கிடக்கின்றன.

கல்லா டத்துக் கலந்தினி தருளி நல்லா ளோடு நயப்புற வெய்தியும்.

-

கல்லாடத்து கல்லாடம் என்னும் ஊரில், கலந்து இனிது அருளி - திருவுருவிற்கலந்து இனிது எழுந்தருளி, நல்லாளோடு உமைப்பிராட்டியாரோடு, நயப்புறவு - இன்பம், எய்தியும் அடைந்தும் என்றவாறு.

‘கல்லாடம்’ ஒரு சிவதலம்.

'நயப்புறவு' இன்பம் எனப் பொருள்படும் நயம் என்னுஞ்

சொல்லிற் றோன்றியது.

பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும் எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும்.

பஞ்சப்பள்ளியில் - பஞ்சப்பள்ளி யென்னும் ஊரில், பால் மொழி தன்னொடும் - பால்போ லினிய சொற்களையுடைய ய உமையவளோடும், எஞ்சாது ஈண்டும் - குறையாது நிறையும், இன்அருள்விளைத்தும் இனிய அருளை விளைத்தும்

என்றவாறு.

-

‘ஈண்டும்’ நிறைத லெனப் பொருள்படுதலை “ஈண்டிய கேள்வியவர்” என்பதற்குப் பரிமேலழகியார் கூறிய வுரையிற் காண்க,*(திருக்குறள் 417)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/127&oldid=1589321" இலிருந்து மீள்விக்கப்பட்டது