உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

திருவாசக விரிவுரை

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை நற்றடம் படிந்தும்

-

95

கிராத வேடமொடு வேடகோலத்துடன், கிஞ்சுக வாயவள் முருக்குமலர் போற் சிவந்த வாயினையுடைய ய உ மையாளின், விராவு கொங்கை நல்தடம் படிந்தும் ஒன்றோடொன்று கலந்த முலைகளாகிய நல்ல குளத்தில் தோய்ந்தும் என்றவாறு. இஃது அருச்சுனன் தவங்கிடந்தஞான்று அவன்பொருட்டு மேற் கொண்டதென மாபாரதங் கூறும்.

‘கிராதன்' வேட்டுவன் எனப் பொருள்படும் ஒரு

வடசொல்.

'கிஞ்சுகம்' முள்முருக்கம் பூவினை யுணர்த்தும் ஒரு

வடசொல்.

விரவுதல் - கலத்தல்; “பன்மணிக் குவையொடும் விரைஇ என்றார் புறத்திலும்* (புறநானூறு 152)

தடம்

பெருமை; ஈண்டுப் பெரியகுளம் என்னும் பொருளில் வந்தது. "தடவுங் கயவு நளியும் பெருமை” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். (தொல்காப்பியம் உரியியல் 22)

-

படிதல் தோய்தல், குளித்தல். இப்பொருட்டாதல் பிங்கலந்தையிற் காண்க. கொங்கை வருடுதலாற் பிறக்கும் ன்பத்தினைக் குளமாக உருவகப்படுத்தினார் என்க.

கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும் மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்திரத் திருந் 20 துற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்;

கேவேடர் ஆகி - வலைஞர் ஆகி, கெளிறது படுத்தும் - கெளிற்று மீனை வீழ்த்தியும், மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் - பெரிய விருப்பத்தினைத் தருவனவாகிய ஆகம நூலை அதன்பால் நின்று மீட்டும் வாங்கியும், மற்று அவை தம்மை - அங்ஙனம் வாங்கிய ஆகம நூல்களை, மகேந்திரத்து

ருந்து - மகேந்திரமலையிலிருந்து, உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும் பொருந்தியதன் ஐந்து முகங்களாற் சொல்லியருளியும் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/128&oldid=1589322" இலிருந்து மீள்விக்கப்பட்டது