உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

  • மறைமலையம் 25

வலைஞன் எனப் பொருடருவதாகிய ‘கேவர்த்த' என்னும் வடசொல் ‘கேவேடர்’ எனத் திரிந்தது.

இறைவன்

வலைஞனாய்ச்

சென்று படுத்தது

சுறவுமீனென்று திருவிளையாடற்புராணங் கூறுமாயினும், அடிகள் அதனைக் கெளிற்றுமீனென்று கூறுதலின் அடிகள் கூற்றே கொள்ளற் பாலதாம் என்க.

படுத்தல் வீழ்த்தல். “எறிந்து களம்படுத்த” எண்புழி இப்பொருட்டாதல் காண்க. (புறநானூறு 19)

'வேட்டு' விருப்பம் எனப் பொருள்படுதலை “உயர்ந்த வேட்டத் துயர்ந்திசினோர்க்கு" என்பதனுரையிற் காண்க.* (புறநானூறு 214)உண்மையறிவு பெறவேண்டினார்க்கு அதனை விளக்கித் தன்பால் அவர்க்கு விருப்பம் மேன்மேல் எழச் செய்தலின் ஆகம நூலுக்கு இங்ஙனம் அடைகொடுத் தோதினார்.

66

66

றைவற்கு ஐம்முகங்கள் இவை என்பது “சத்தியோ சாதம் வாமம் அகோரம், தற்புருடம் ஈசானமென ஈசர்க் கைம்முகம்” என்னுந் திவாகர சூத்திரத்திற் காண்க. இறைவற்கு ஐம்முகங்கள் உண்டென்னுங் கொள்கை மிகப் பழமையுடையதென்பது ‘ஈசாநஸ் ஸர்வவித்யாநாம்”* (தைத்திரீய ஆரணியகம் - 10,21,39) எனவும், “தத்புருஷாய வித்மஹே”* (10,20,38) எனவும், ‘அகோரேப்ய:’* (10,19,37) எனவும், “வாமதே வாயநம:"* (10,18,39) எனவும், “ஸத்யோ ஜாதம் ப்ரபத்யாமி”* (10,17,35) எனவும் போந்த தைத்திரீய ஆரணியக மறைமொழிகளால் நன்கு தெளியப்படும். இவற்றுள், ஈசானம் என்பது சிறுமகாரின் முகம் போல்வதாய்த் தூய பளிங்கின் ஒளியை யுடைத்தாய் எக்காலும் வடகிழக்கை நோக்கியபடியாய் உச்சிமேல் இருப்பது; இவ் ஈசான முகத்தின் கீழ், ளைஞர்க்குரிய முகம்போல்வதாய்க் கோங்கம்பூவின் நிறம்வாய்ந்து கிழக்கு நோக்கி விளங்குவது தற்புருடம் என்னும் முகமாம்; கண்டாரை அச்சுறுத்தும் இயல்பினதாய்க் கீழ்நாலும் தாடியும் புறந்தோன்றும் எயிறும் உடைத்தாய்க் கறுத்து முதியோர் முகம் போன்று வலத்தோண் மேல் தெற்கு நோக்கிய படியாய் இருப்பது அகோர முகமாம்; மாதர் முகம்போல்வதாய் வெட்சிப்பூவின் நிறம் வாய்ந்து இடத்தோண்மேல் மிளிருவது வாமதேவ முகமாம்; பிடரிமேல் நின்று அரசர் முகத்தை ஒத்துப் பால்போற் றிகழுவது சத்தியோ சாதம் என்னும் முகமாம். இவ்வாறு சிவதருமோத்ரம் கூறுதலை,

று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/129&oldid=1589323" இலிருந்து மீள்விக்கப்பட்டது