உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

"உச்சிமுகம் ஈசானம் ஒளிதெளியப் பளிங்கே

உத்தரபூ ருவதிசையை நோக்கியுறும் உகந்தே, நிச்சயித்த முகத்தின்கீழ்ப் பூர்வதிசை நோக்கி

நிகழுமுகந் தற்புருடம் கோங்கலர்போல் நிறமே, அச்சுறுத்தும் அகோரமுகம் அறக்கரிது கராளம்

அவிழ்தாடி வலத்தோளில் தென்னோக்கி அமரும், செச்சைநிறத் தெரிவைமுகம் இடத்தோண்மேல் வாமம் சிறுபுறத்தின் முகஞ்சத்தி யோசாதந் திகழ்வால்”

97

என்னும் அதன் செய்யுளாற் காண்க. இனிச் சதாசிவரூபம் என்னும் நூல் கன்ம சாதாக்கியமாகிய தற்புருடமுகம் கிழக்கு நோக்குவதென்றும், கர்த்தருசாதாக்கியமாகிய அகோர முகம் தெற்கு நோக்குவதென்றும், மூர்த்திசாதாக்கியமாகிய சத்தியோ சாதமுகம் வடக்கு நோக்குவதென்றும், அமூர்த்தி சாதாக்கிய மாகிய வாம தேவமுகம் மேற்கு சிவசாதாக்கியமாகிய ஈசானமென்னும் ஊர்த்துவமுகம் நான்கு திக்கும் நோக்குவதென்றும் கூறுதலை,

“இந்தத் தியான எழிற்றிரு மேனியில்

ஐந்து சாதாக்கியம் அடையும்படி

அவர்க்மை கீழ்தென் வடமேற் றிசைமிசை நோக்கிய முகங்கள் நுவலருந் தொழிற் சாதாக்கியம் ஐந்தென் றுரைக்கத் தகுமே அம்முகம் ஐந்துஞ் சகளம தாம்பொழு திண்ணம் ஈசா னாதி எனப்படும்"

என்னும் அதன் சூத்திரத்தால் உணர்க.

நந்தம் பாடியில் நான்மறை யோனாய் அந்தமில் ஆரிய னாய்அமர்ந் தருளியும்;

நோக்குவதென்றும்,

நந்தம்பாடியில் - நந்தம்பாடி என்னும் ஊரில், நால்மறை யோனாய் - நான்கு வேதங்களையும் உணர்ந்தோனாய், அந்தம் இல் ஆரியனாய் அமர்ந்தருளியும் - ஈறில்லாத ஆசிரியனாய் வீற்றிருந்தருளியும் என்றவாறு.

‘நந்தம்பாடி' ஒரு சிவதலம்; நம்தம்பாடி எனப் பிரித்து நமது ஊர் என்று பொருளுரைத்தலும் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/130&oldid=1589324" இலிருந்து மீள்விக்கப்பட்டது