உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் - 25

நான்மறையோன் என்பதற்கு நான்கு வேதங்களுக்கும் பொருளாய் உள்ளவன் எனப் பொருளுரைப்பினும் ஆம்.

‘அந்தம்’ ஈறு எனப் பொருள்படும் ஒரு வடசொல்.

ஆரியன்' ஆசிரியன், மேலோன் எனப் பொருள்படும் ஒரு

வடசொல்.

25

வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும் நூறுநூ றாயிரம் இயல்பின தாகி

ஏறுடை ஈசன்இப் புவனியை யுய்யக்

கூறுடை மங்கையுந் தானும்வந் தருளிக் குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்;

-

வேறு வேறு உருவும் வெவ்வேறு திருவுருவங்களும், வேறு வேறு இயற்கையும் - வெவ்வேறு தன்மைகளும், நூறு நூறாயிரம் இயல்பினது ஆகி -நூறு இலட்சம் இயற்கையை உடை யனவாக, ஏறு உடை ஈசன் - எருதினை ஊர்தியாக உடை ய சிவபெருமான், இப்புவனியைஉய்ய ப்புவனியை உய்ய - இந்நில வுலகத்திலுள் ளாரைப் பிழைப்பித்தல் வேண்டி, கூறு உடை மங்கையும் தானும் உ வந்து அருளி - தன்னை ஒரு கூறாக உடைய உமையும் தானுமாய் ஒருங்கு போந்தருளி, குதிரையைக் கொண்டு குடநாடு அதன் மிசை குதிரைகளைச் செலுத்திக்கொண்டு சென்று மேல் நாட்டின் மீது, சதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் திறமை யுண்டாக வணிகர் குழுவோடு சேர்ந்து தான் எழுந் தருளியும் என்றவாறு.

-

-

றைவன் தன்னை வழிபடும் அன்பர் வேண்டிய வாறெல்லாம் உருவங்கள் மேற்கொண்டு அவர்க்கு அருள் செய்வானாகலின் அவனெடுக்கும் உருவங்களுக்கும் அவ் வுருவங்களுக்குரிய இயல்புகளுக்கும் ஓர் அளவில்லை யென்று உணர்த்துவார் அவை தம்மை 'நூறு நூறாயிரம் இயல்பி னதாகி' என்றருளிச் செய்தார். அங்ஙனம் வேறு வேறாய் எடுக்கும் உருவங்களிற் சிலவும் அவை பற்றி வரும் இயற்கைகளிற் சிலவும் அடிகள் இவ்வகவலில் முன்னும் பின்னும் கூறுகின்றா ராகலின், இவ் அடி இரண்டும் அவற்றிடையே நின்று அவன்றன் அளவிலாற்றலை விளக்குதற்கு அமர்ந்தன வன்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/131&oldid=1589325" இலிருந்து மீள்விக்கப்பட்டது