உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

99

எஞ்ஞான்றும் இறைவன் அன்பர் பொருட்டாகவே இங்ஙனம் பலவேறு உருவங்களும் இயற்கைகளும் உடையனாவதல்லது, தன் பொருட்டு இவற்றுள் ஏதும் உடையனல்லன. இஃது,

‘உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவிறந்த அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வானபோது திருமேனி யுபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங் கருமேனி கழிக்கவந்த கருணையின் வடிவு காணே

என்னுஞ் சிவஞானசித்தித் திருச் செய்யுளானும் உணர்ந்து கொள்ளப்படும்.

'வேறு வேறுருவும் நூறு நூறாயிரம் இயல்பினதாகி' எனவும் ‘வேறு வேறியற்கையும் நூறு நூறாயிரம் இயல்பின தாகி' எனவும் தனித்தனி சென்றியைதலின் இயல்பினவாகி என்று பன்மை வாய்ப்பாட்டால் ஓதாமல் 'இயல்பினதாகி' என்று ஒருமை வாய்பாட்டாற் கூறினார். உரு, இயற்கை என்னுஞ் சொற்கள் பன்மையீறு இல்லாதனவாகலின் அவ்வாறு ஒருமைவினை இன்னோரன்ன வெல்லாம்,

66

ஏற்றற்குரியவாமென்க;

'ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகும் இடனுமா ருண்டே'

(* தொல்காப்பியம் சொல் 461)

என்பதனான் அமைக்கப்படும்.

இனி

66

‘வினை எஞ்சு கிளவியும் வேறு பல் குறிய”* (தொல்காப்பியம் சொல் 457) என்பதனால் 'இயல்பினதாகி’ என்பதை இயல்பினதாக என்று திரிக்க.

புவனி இட வாகுபெயராய் மக்களை உணர்த்திற்று.

உய்விப்ப என நிற்கற்பாலது பிறைவினைப் பொருளை யுணர்த்தும் வி எனும் ஈறுதொக ‘உய்ய' என நின்றது; “குடி பொன்றிக் குற்றமு மாங்கே தரும்”* (தொல்காப்பியச் சூத்திர விருத்தி) என்புழிப்போல.

மதுரைமாநகர் திருப்பெருந்துறைக்கு நேர்மேற்கே யிருத்தலால் அது குடநாடென்று சொல்லப்படுவதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/132&oldid=1589326" இலிருந்து மீள்விக்கப்பட்டது