உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

  • மறைமலையம் - 25

திருப்பெருந்துறையிலிருந்து மதுரைமாநகர்க்கு இறைவன் குதிரைத் திரள் கொண்டு போந்தமைபற்றி இங்ஙனங் கூறினார்.

‘சதுர்’ என்பது திறமைப்பொருளை யுணர்த்தும் சதுர என்னும் வடசொற் சிதைவு.

சாத்து' வணிகர் கூட்டம் என்று பொருள்படுதலைக் “கழுதைச் சாத்து” என்னும் பெரும்பாணாற்றுப் படைச் சொற்றொடர்க்குக் “கழுதையிலே மிளகெடுத்துக்கொண்டு போகின்ற திரள்” என்று நச்சினார்க்கினியர் கூறும் உரையிற் காண்க; "சாத்தொடுபோந்து'* (சிலப்பதிகாரம் 11, 190) 11,190) என்பதற்கு அடியார்க்கு நல்லாரும் “வாணிகச் சாத்தொடு போந்மு" என்று பொருளு ரைப்பர். இறைவன் வணிகர் திரளோடு போந்தமையினை,

66

‘அழகினுக் கழகார் மேனி ஆலவாய் அமுத வாயான்

பழுதில்சாத் தவர்கள் சூழப் பல்பெருஞ் சிறப்பிற் றோன்றிப் பொழிலுக கனைத்துங் காணப் புரவிநூற் கியைய மிக்க செழியன்முன் குதிரை யிட்ட திருவிளை யாடல் கேண்மின்

என்று பெரும்பெற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறுமாற்றாற் காண்க.

வேலம் புத்தூர் விட்டே றருளிக்

30 கோலம் பொலிவு காட்டிய கொள்ககையும்

வேலம்புத்தூர் - வேலம்புத்தூரிலே, விட்டேறு அருளி வேற் படையினைக் கொடுத்தருளி, கோலப் பொலிவு காட்டிய கொள்கையும் தனது திருக்கோலச் சிறப்பினைக் காட்டிய கோட்பாடும் என்றவாறு.

-

என்றது இறைவன் உக்கிரகுமாரற்கு வேற்படை நல்கிய திருவிளையாட்டினைக் குறித்தது. இது பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற் புராணத்துட் காண்க. இங்ஙனம் வேற்படை கொடுத்த இடமாதல் பற்றியே அவ்வூர் வேலம்புத்தூர் என்று பெயர்பெற லாயிற்றென்று உணர்ந்து கொள்க.

‘விட்டேறு'

-

என்னுஞ் சால் வேற்படையினை உணர்த்துதல் “சக்தி எஃகம் உடம்பிடி குந்தம், விட்டேறு அரணம் ஞாங்கத் அயில்வேல்” என்னுந் திவாகரத்தாற் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/133&oldid=1589327" இலிருந்து மீள்விக்கப்பட்டது