உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

101

இதற்கு இவ்வாறு பொருளுரைக்க. அறியாதார் 'விட்டேறு அருளி' என்னுஞ் சொற்றொடரை ஏறுவிட்டு அருளி என மாற்றி ‘எருதுவிடுத் தருளியும்' எனப் பொருள் கூறுவர். இறைவன் ஏறுவிடுத்தருளினா னென்பது புராணங் களுட் காணாமையின் அவ்வுரை கொள்ளாமென்பது.

'கோலம் பொலிவு' ஆறாம்வேற்றுமைக்கண் மகரங் கெட்டுக் கோலப்பொலிவு என நிற்கற்பாலது (தொல்காப்பியம் எழுத்து 310) எதுகை நோக்கி “மெலிக்கும் வழி மெலித்த லாயிற்று (புறநானூறு 1).”

பொலிவு' சிறப்புப் பொருட்டாதல், “தாழ்சடைப் பொலிந்த அருநதவத் தோற்கே" (தொல்காப்பியம் சொல் 403) என்பத னுரையிற் காண்க.

தர்ப்பணம் அதனிற் சாந்தம் புத்தூர்

விற்பொரு வேடற் கீந்த விளைவும் ரு

-

-

சாந்தம்புத்தூர் - சாந்தம்புத்தூர் என்னும் திருப்பதியில், வில் பொரு வேடற்கு வில்லாற் போர்த் தொழிலைச் செய்யும் வேடன் ஒருவனுக்கு, தர்ப்பணம் அதனில் கண்ணாடியின் கண்ணே தோன்றி, ஈந்த விளைவும் அவன் வேண்டிய தொன்றை வழங்கிய ஆக்கமும் என்றவாறு.

இது, வலந்தரும் வாளுங் கணையும் வேடற்கு வழங்கியது போலும்.

சொல்.

'தர்ப்பணம்' கண்ணாடியினை யுணர்த்தும் ஒரு வட

விளைவு’ ஆக்கம் எனப் பொருள்படுதலை "வேண்டிய பொருளின் விளைவு நன்கறிதற்கு” என்பத னுரையிற் காண்க. (புறப்பொருள் வெண்பா மாலை1 4)

மொக்கணி அருளிய முழுத்தழன் மேனி சொக்க தாகக் காட்டிய தொன்மையும்:

மொக்கணி கொள்ளுள்ள பையை, அருளிய

-

குதிரை

வாயிற் கட்டும் பொருட்டு, முழுத்தழல் மேனி - முழுமை யாகிய நெருப்பை யொத்த திருமேனியை, சொக்கதாக - அழகாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/134&oldid=1589328" இலிருந்து மீள்விக்கப்பட்டது