உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் - 25

காட்டிய தொன்மையும் தன்மையும் என்றவாறு.

-

பாண்டியற்குக் காட்டிய பழைய

என்றது இறைவன் பாண்டியற்குக் குதிரை கொண்டுவந்த ஞான்று, தான் இவர்ந்துவந்த குதிரைக்குத் தீனி ஊட்டும் பொருட்டுக் கொள் முதலியன வேவுவித்து இட்ட பையைத் தானே எடுத்து அதன்வாயிற் கட்டுவானாய் அனற்பிழம்பை யொத்த தன் அருட்டிருமேனியைப் பாண்டியன் காணுமாறு காட்டிய அருட்பான்மையைக் கூறியது.

விட்டே மொக்கணி

'மொக்கணி' கொள் முதலியன இட்ட பை. “கழுவிய பயறுங்கொள்ளுங் கடலையுந் துவரையோடு, முழுவதுஞ்சிறக்க மொக்கணி முட்டக்கட்டி” (குதிரை நரியான திருவிளையாடல் 6) என்றார் பெரும்பற்றப் புலியூர் நம்பியும். 'அருளிய' என்பது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் அருளும் பொருட்டு என்று பொருளாம்.

‘முழுத்தழல்’ அனற்பிழம்பு.

சொக்கு - அழகு; இப்பொருட்டாதல் பிங்கலந்தையிற்

காண்க.

இனி, “ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இலா” முதல்வற்கு முழுத்தழல் போலும் மேனி உளதாக அடிகள் ஆண்டாண்டு ஓதுதல் என்னையெனின்; மக்களாகிய சிற்றுயிர்களாற் காணவுங் கருதவும் படாத இயல்பினனாகிய இறைவன் அவர்மாட்டு வைத்த பேரிரக்கத்தால் தன்னை அவர் ஒருவாற்றா னாயினுந் தெளியக் கண்டு வழிபட்டு உய்தற்பொருட்டுத், தான் அவர் கட்புலனெதிரே தன்னை விளங்கக் காட்டுதற்கு வாயிலாய் நிற்பது அனற்பிழம்பு ஒன்றுமேயாம்.

மண் புனல் அனல் வளி விசும்பு என்னும் ஐம்பெரும் பாருள்களுள் அனலினையே தான் விளங்குதற்கு வாயிலாக அவன் கொண்டவா றென்னை யெனின்; அனல் ஒன்றுமே இறைவனியல்பை ஒருபுடை யொப்பதாம். யாங்ஙனமெனின், இறைவன் அருளொளியுடைய னாய் உயிர்களின் அகத்தே யுள்ள ஆணவ வல்லிருளைத் துரக்குமாறு போல, அனலும் ஒளியுடைப் பொருளாய் உயிர் கட்குப் புறத்தேயுள்ள பாயிருளைப் பருகுதலானும்; இறைவன் தான் என்றுந் தூயனாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/135&oldid=1589329" இலிருந்து மீள்விக்கப்பட்டது