உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

103

இருந்தே தூயவல்லா ஏனைப் பொருள்களை யெல்லாந் தூய்மை செய்தல் போல, அனலும் தான் என்றுந் தூயதாயிருந்தே தன்பாற் சார்ந்த தூயவல்லா எல்லாப் பொருள்களையும் எரித்துச் சாம்பராக்கித் தூய்மை செய்த லானும்; இறைவன் ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்கள் புரியுமாறு போல, அனலும் உடம்புகளைப் படைத்தற்கு வேண்டுமளவு வெம்மையைத் தந்து படைத்தும், படைக்கப்பட்ட அவை நிற்கவேண்டுங் கால எல்லையளவும் தனது வெம்மை மிகாதுங் குறையாதும் உலாவ வைத்து அவற்றைக் காத்தும், அவற்றின் காலவெல்லை கழிந்த துணையானே தனது வெம்மையை மிகுத்தேனுங் குறைத்தேனும் அவற்றை அழித்தும் முத்தொழில் புரியக்காண்டலானும்; இறைவன் அருவாயும் உருவாயுமிருந்து உயிர்களாற் பற்றப் படாமைபோல, அனல் விறகினுள் அருவாய் மறைந்திருந்தும் முறுகக் கடைந்தவழி அவ்விறகின்கட் புலனாய் உருவுகொளத் தோன்றியும் எவரானும் எதனாலும் பற்றப்படாத இயற்பிற்றாய் நிற்றலானும், இறைவன் எல்லாவுலகங்களினும் எல்லாப் பொருள்களினும் எல்லா உயிர்களினும் விரவி நிற்றல்போல, அனலும் எல்லா உலகங்களினும் எல்லாப் பொருள்களினும் எல்லா உயிர்களினும் ஊடுருவி நிற்றலானும் அனல் ஒருவாற் றான் இறைவனியல்போடு ஒப்புடை யுடைத்தாதல் கண்டு கொள்க. இஃதல்லாத ஏனை நான்கு பொருள்களில் வளியும் விசும்பும் ஒருவாற்றானும் கட்புலனாகாத அருவப்பொருள் களாய்த் தம்மியற்கையில் ஒளிவிளக்கமிலாதனவா இருத்த லானும், மண்ணும் புனலும் கட்புலனாம் உருவுடையவேனும் தம் இயற்கையில் அங்ஙனமே ஒளிவிளக்கம் வாயாதனவாய்த் தூயவல்லாப் புன்பொருட் சேர்க்கையால் தாமுந் தூய்மை கெட்டுப் போவனவாய்ப் பருப்பொருள்களாய் உயிர்களாற் பற்றப்படுவனவாய் இருத்தலானும் அவை நான்கும் இறை வனியல்போடு ஒரு சிறிதும் ஒவ்வாமையின் அவை அவனது விளக்கத்திற்கு வாயிலாக மாட்டாவாயின வென்க.

முதல்வன் அனற் பிழம்பினையே ஓர் ஒப்பற்ற வாயிலாக் கொண்டு விளங்கித் தோன்றி ஆருயிர்கட்கு அருள்புரிதல் கண்டன்றே இருக்குவேதம் முழுவதூஉம் அனற் கடவுள் வழிபாடு மிகுத் தொடுத்தோதுவதாயிற்று. அவ்விருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/136&oldid=1589330" இலிருந்து மீள்விக்கப்பட்டது