உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

❖ - 25❖ மறைமலையம் – 25

வேதத்தின் முதல் ஏழுமண்டிலங்களினும் மண்டிலங்கடோறும் முதற்கண் அனற்கடவுள் வழிபடு விதந்தெடுத்து ஓதப் பட்டதூஉம், அனற்பிழம்பின்கண் விளங்கித் தோன்றும் உருத்திரன் ஒருவனே அவ்வேதத்தான் அறிவுறுக்கப்பட்ட முழுமுதற் கடவுள் என்பது தெற்றெனப் புலப்படல் வேண்டி அவ்வேதத்தின் இறுதிக்கண் நின்ற பத்தாம் மண்டிலத்தின் முதலினும் ஈற்றினும் அவ்வனற் கடவுள் வழிபாடு விதந் தடுத்துரைத்து முடிக்கப்பட்டதூஉம் இவ்வுண்மையினை

நிலைபெற நாட்டும் என்க.

இவ்வாறு அனற்பிழம்பின்கண் விளங்கித் தோன்றிநின்று அருள் வழங்கும் முழுமுதற் கடவுளும், அக்கடவுள் விளங்குதற்கு வாயிலான அனலும் உருத்திரப் பெயரால் வழங்கப்படுதலை அதன் முதன் மண்டிலத்து நாற்பத்து மூன்று நூற்றுப் பதினைந்தாம் பதிகங்களினும், இருபத்தேழாம் பதிகத்தின் பத்தாம் மந்திரத்தும் இரண்டாம் மண்டிலத்தின் இரண்டாம் பதிகத்தின் ஐந்தாம் மந்திரத்தும் நான்காம் மண்டிலத்தின் மூன்றாம் பதிகத்தின் முதல் மந்திரத்தும் முறையே கண்டு கொள்க. இவ்வரிய பெரிய உண்மை,

“எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன

துருவ ருக்கம் தாவ துணர்கிலார்

அரியயற் கரியானை அயர்த்துப் போய் நரிவிருத்தம தாகுவர் நாடரே”

என்னுந் திருநாவுக்கரசு அடிகளின் தேவாரத் திருமொழியால் நன்குணரப்படும்.

சிவபிரான் இங்ஙனம் அனல் வடிவினராய் விளங்குதல் கண்டே சாந்தோக்கிய உபநிடதமும் “பொற்றாடியுடனும் பொற் குஞ்சியுடனும் நகம முதலாக முழுதும் பொன் வண்ணமாய் ஞாயிற்றினால் மலர்ந்த இரண்டு செந்தாமரை போலும் விழிகளும் உடையர் இந்த ஞாயிற்றின் இடையேயுள்ள இரண்ணியபுருடர்” என்று கூறாநிற்கும். இனித் தைத்திரீய ஆரணியகமும் “பொற்றோள் உடையார்க்குப், பொன்னிறம் வாய்ந்தார்க்குப், பொன்உரு வுடையார்க்கு வணக்கம்” என்று கூறிற்று. இவ்வாறே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/137&oldid=1589331" இலிருந்து மீள்விக்கப்பட்டது